வெளியாகியது கூலி படத்தின் சில காட்சிகள்..! கெஞ்சி கேட்டுகொண்ட இயக்குனர் Lokesh Kanagaraj..!

மாநகரம் படத்தின் மூலம் இயக்குனராக சினிமாவுக்குள் அடியெடுத்து வைத்து இன்று தனக்கான மிகப்பெரிய இடத்தை பிடித்து இருப்பவர் லோகேஷ். இவர் இயக்கத்திற்கு மிகபெரிய ரசிகர்கள் கூட்டமே இருக்கிறது. மாநகரம் படத்தை தொடர்ந்து இவர் இயக்கிய கைதி ரசிகர்களிடம் பலத்த வரவேற்பினை பெற்று இருந்தது. இப்படத்தை தொடர்ந்து விக்ரம் , லியோ என தொடர் ஹிட் படங்களை கொடுத்து அசத்தி உள்ளார்.

வெளியாகியது கூலி படத்தின் சில காட்சிகள்..! கெஞ்சி கேட்டுகொண்ட இயக்குனர் Lokesh Kanagaraj..! 1

விளம்பரம்

தற்போது இவர் சூப்பர் ஸ்டாரை வைத்து கூலி படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் நாகர்ஜுனா முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். மேலும் கன்னட நடிகர் உபேந்திரா என பல முன்னணி நட்சத்திரங்களும் இப்படத்தில் இணைந்து உள்ளனர்.படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது.ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் இப்படத்திற்கு காத்து உள்ளனர்.

வெளியாகியது கூலி படத்தின் சில காட்சிகள்..! கெஞ்சி கேட்டுகொண்ட இயக்குனர் Lokesh Kanagaraj..! 3

விளம்பரம்

இந்நிலையில் இப்படத்தில் நாகர்ஜுனா காட்சிகள் சில இணையத்தில் லீக் ஆகி உள்ளது. இது படக்குழுவிற்கு கடும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. தயவு செய்து இதனை வெளியிட வேண்டாம் எனவும் , இது பலரின் உழைப்பு எனவும் இயக்குனர் லோகேஷ், ரசிகர்களிடம் கெஞ்சி கேட்டுக்கொண்டு உள்ளார்.

விளம்பரம்

Leave a Comment