முன்னணி நடிகராக தமிழ் சினிமாவில் வலம் வருபவர் தனுஷ். மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டமே தமிழ் சினிமாவில் தனுசுக்கு உள்ளது. தற்போது நடிகனாக மட்டுமில்லாமல் இயக்குனராகவும் கலக்கி வருகிறார். இவர் நடிப்பு மற்றும் இயக்கத்தில் உருவான இவரின் 50வது படமான ராயன் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்து உள்ளது. இப்படத்தை தொடர்ந்து நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என்ற படத்தையும் இயக்கி உள்ளார் தனுஷ்.

இப்படம் அடுத்து வெளியாக உள்ளது இப்படத்தை தொடர்ந்து நடிகர் தனுஷ் தற்போது குபேரன் படத்தில் நடித்து வருகிறார். பின்னர் புதிய பாலிவுட் படத்தில் இணைய இருக்கிறார். அடுத்தடுத்து படங்களில் பிசியாக இருக்கும் இவர், மீண்டும் தனது 52வது படத்தை இயக்கி நடிக்க உள்ளார். இப்படத்தை ரெட் ஜெயண்ட் நிறுவனம் தயாரிக்க உள்ளது.

இப்படத்தின் போஸ்டரை தற்போது வெளியிட்டு உள்ளார் தனுஷ். இவர் இயக்கி நடிக்கும் 52வது படத்திற்கு இட்லி கடை என பெயரிட்டு உள்ளார். படத்தில் நடிக்க இருக்கும் நடிகர்கள் குறித்து எந்த தகவலும் வெளியாகாத நிலையில், இப்படத்தில் நடிகை நித்யா மேனன் நடிக்கலாம் என தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்து உள்ளார்.
#D52 #DD4 Om Namashivaaya 🙏♥️ @RedGiantMovies_ @DawnPicturesOff @Aakashbaskarann @wunderbarfilms @theSreyas @gvprakash @editor_prasanna pic.twitter.com/o2QsS4FGOr
— Dhanush (@dhanushkraja) September 19, 2024