காலில் அறுவை சிகிச்சை..! இருந்தும் வேட்டையன் இசைவெளியீட்டு விழாவில் ஆட்டம் போட்ட DD..! வைரலாகும் வீடியோ..!

விஜய் தொலைக்காட்சியில் முன்னணி நிகழ்ச்சி தொகுப்பாளராக வலம் வருபவர் திவ்ய தர்ஷினி. இவருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டமே இருக்கிறது. விஜய் தொலைக்காட்சி ஆரம்பத்தில் பல ரியாலிட்டி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தார். தற்போது இருக்கும் பல தொகுப்பாளர்களுக்கும் ரோல் மாடலாக இருந்து வருகிறார் திவ்ய தர்ஷினி. பல இசைவெளியீட்டு விழா விருது வழங்கும் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி கலக்கியிருக்காரு திவ்ய தர்ஷினி.

காலில் அறுவை சிகிச்சை..! இருந்தும் வேட்டையன் இசைவெளியீட்டு விழாவில் ஆட்டம் போட்ட DD..! வைரலாகும் வீடியோ..! 1

விளம்பரம்

சமீபகாலமாக இவர் கால்களில் பாதிப்பு இருப்பதால் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதை தவிர்த்து வருகிறார். மேலும் பல நிகழ்ச்சிகளுக்கு நடக்கமுடியாமல் வீல் சேரிலும் வந்து இருக்கிறார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களிடம் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது. சில நாட்களாக இன்ஸ்டாகிராம் பக்கம் வராத திவ்ய தர்ஷினி தற்போது மருத்துவமனையில் இருப்பது போல புகைப்படம் வெளியிட்டு உள்ளார்.

காலில் அறுவை சிகிச்சை..! இருந்தும் வேட்டையன் இசைவெளியீட்டு விழாவில் ஆட்டம் போட்ட DD..! வைரலாகும் வீடியோ..! 3

விளம்பரம்

இது இரண்டு மாதங்களுக்கு முன்பாக நடைபெற்ற அறுவை சிகிச்சை எனவும், தற்போது கால் சரியாகி விட்டதாக கூறி உள்ளார். இந்நிலையில் வேட்டையன் இசைவெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட திவ்ய தர்ஷினி மனசிலாயோ பாடலுக்கு குத்தாட்டம் போட்டு வீடியோ வெளியிட்டு உள்ளார். இந்த வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று வைரலாகி வருகிறது.

தொடர்புடையவை  "மரண அடி அடிக்கப்போறேன்....பிரஸ் மீட்டில் வேற லெவல் confidence-இல் பேசிய லெஜெண்ட்"!!

 

விளம்பரம்

விளம்பரம்

Leave a Comment