குமரவேலை கடத்தியதை போட்டுக்கொடுத்த ராஜி..! வெளுத்தெடுத்த பாண்டி..! பாண்டியன் ஸ்டோர்ஸ் ப்ரோமோ..!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல தொடர் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த தொடருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டம் உள்ள நிலையில், தற்போது தொடரின் இரண்டாவது சீசன் ரசிகர்களுக்காக இயக்கப்பட்டு ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. முதல் சீசனை போலவே இந்த சீசனுக்கும் மக்கள் பேராதரவை கொடுத்து வருகின்றனர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

குமரவேலை கடத்தியதை போட்டுக்கொடுத்த ராஜி..! வெளுத்தெடுத்த பாண்டி..! பாண்டியன் ஸ்டோர்ஸ் ப்ரோமோ..! 1

விளம்பரம்

தற்போது புதிய ப்ரோமோ வெளியாகியுள்ளது. ப்ரோமோவில் குமரவேலை பார்க்க பெண் வீட்டார் வருகின்றனர். அவர்கள் பாண்டியை சந்தித்து பேசும்பொழுது, அங்கே வந்த கோமதி அண்ணன்கள் பாண்டி குடும்பத்தை அசிங்கமாக பேசுகின்றனர். இதனால் கடுப்பாகிய ராஜி அப்பா மற்றும் சித்தப்பாவை கிழித்தெடுக்கிறார். மேலும் குமரவேல் தங்களை கடத்தியதையும் போட்டு உடைக்கிறார்.

குமரவேலை கடத்தியதை போட்டுக்கொடுத்த ராஜி..! வெளுத்தெடுத்த பாண்டி..! பாண்டியன் ஸ்டோர்ஸ் ப்ரோமோ..! 3

விளம்பரம்

இதை கேட்டு அதிர்ச்சியாகிய பாண்டி, குமரவேலை போட்டு அடி வெளுக்கிறார். இந்த ப்ரோமோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று உள்ளது. இது கோமதியின் அண்ணன்களுக்கு தேவை தான் என ரசிகர்கள் கருத்துக்களை கூறி வருகின்றனர்.

விளம்பரம்

Embed Video Credits : VIJAY TELEVISION

விளம்பரம்

Leave a Comment