தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட இயக்குனர் என பெயர் எடுத்து இருப்பவர் ஷங்கர். பல வெற்றிபடங்களை கொடுத்து முன்னணி இயக்குனராக சினிமாவில் வலம் வருகிறார். இவர் அண்மையில் இயக்கி வெளியிட்டு இருந்த இந்தியன் 2 மிகவும் மோசமான விமர்சனங்களை ரசிகர்களிடம் பெற்று இருந்தது. இப்படத்தை தொடர்ந்து தெலுங்கில் ராம் சரணை வைத்து கேம் சேஞ்சர் படத்தினை இயக்கி உள்ளார்.

இப்படம் வெளியாவதற்கான வேலைகள் தற்போது நடைபெற்று வருகிறது. இந்தியன் 2 மாபெரும் தோல்வியை சந்தித்து இருக்கும் நிலையில், கேம் சேஞ்சர் படம் வெற்றிபெறுமா என தெலுங்கு ரசிகர்களிடம் கவலை ஏற்பட்டு இருக்கிறது. இந்நிலையில், தனக்கு எக்ஸ் பக்கத்தில், சங்கர் எச்சரித்து அறிக்கை வெளியிட்டு இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

அந்த பதிவியில் சு வெங்கடேசனின் வேள்பாரி கதையின் பதிப்புரிமை வைத்திருப்பவராக, இந்த நாவலின் முக்கிய காட்சிகள் அனுமதியின்றி பல படங்களில் பயன்படுத்தப்படுவதை பார்த்து மிகுந்த வருத்தம் அடைகிறேன் என கூறி உள்ளார். மேலும் சமீபத்திய ட்ரைலர் ஒன்றில் நாவலின் காட்சி ஒன்றை படமாக்கப்பட்டு இருப்பதை க்கண்டு வேதனை அடைந்ததாக கூறியுள்ளார். இந்த நாவல் காட்சிகளை எங்கேயாவது பயன்படுத்தினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளார்.
Attention to all ! As the copyright holder of Su. Venkatesan’s iconic Tamil novel “Veera Yuga Nayagan Vel Paari”, I’m disturbed to see key scenes being ripped off & used without permission in many movies. Really upset to see important key scene from the novel in a recent movie…
— Shankar Shanmugham (@shankarshanmugh) September 22, 2024