தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக ஜொலித்தவர் கனகா. அழகாலும் நடிப்பாலும் தனக்கென பெரிய ரசிகர்கள் கூட்டத்தை கொண்டு இருந்தார் இவர். ராமராஜனுக்கு ஜோடியாக கனகா நடித்த கரகாட்டக்காரன் படம் இன்று வரை ஹிட் படங்களில் ஒன்றாக உள்ளது.இப்படத்தில் ராமராஜனுக்கு இணையாக நடித்தும் நடனமாடியும் ரசிகர்களை கொள்ளையடித்து இருந்தார்.

இவ்வாறு முன்னாடி நடிகையாக வலம் வந்த இவர் ஒரு காலகட்டத்தில் சினிமாவை விட்டே முழுவதும் விலகினார். இது இவரின் ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியை கொடுத்து இருந்தது. குடும்ப பிரச்சனைகளால் சினிமாவை விட்டு விலகிய கனகா தனியாக வசித்து வருகிறார். அண்மையில் இவரின் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி இருந்தது.

இந்நிலையில் தற்போது நடிகை கனகாவின் லேட்டஸ்ட் புகைப்படம் வெளியாகி உள்ளது . இந்த புகைப்படம் ரசிகர்களால் ஷேர் செய்யப்பட்டு இணையத்தில் வைரலாகி வருகிறது. ஒரு காலத்தில் எப்படி இருந்த நடிகை என கூறி நடிகை கனகாவின் புகைப்படத்திற்கு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.