அடுத்தடுத்து முடிவுக்கு வரும் 5 சன்டிவி சீரியல்கள்..! ரசிகர்களுக்கு காத்திருக்கும் பேரதிர்ச்சி..!

சீரியல்களுக்கு மிகவும் பெயர் போன தொலைக்காட்சி என்றால் அது சன்டிவி தான். பல ஹிட் நாடகங்களை கொடுத்து முன்னணி இடத்தை பிடித்து இருக்கிறது. தற்போதுவரை சிறந்த சீரியல்களை இயக்கி மக்களை மகிழ்வித்து வருகிறது. தற்போது வரை பல சேனல்களில் தொடர்கள் ஒளிபரப்பாகி வந்தாலும் சன்டிவி தான் முதலிடத்தில் இருக்கிறது எனலாம்.

அடுத்தடுத்து முடிவுக்கு வரும் 5 சன்டிவி சீரியல்கள்..! ரசிகர்களுக்கு காத்திருக்கும் பேரதிர்ச்சி..! 1

விளம்பரம்

தற்போது சன்டிவியில் சிங்கப்பெண்ணே, கயல், சுந்தரி, மருமகள் போன்ற சீரியல்கள் முதலிடத்தில் உள்ளது. இருப்பினும் விஜய் டிவி நாடகங்களும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெறுவதால், சன்டிவி தொடர்களின் டி ஆர் பி அடிவாங்கி வருகிறது. இந்நிலையில் இனியா மற்றும் சுந்தரி தொடர் முடிவுக்கு வர இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

அடுத்தடுத்து முடிவுக்கு வரும் 5 சன்டிவி சீரியல்கள்..! ரசிகர்களுக்கு காத்திருக்கும் பேரதிர்ச்சி..! 3

விளம்பரம்

அதை தொடர்ந்து மிஸ்டர் மனைவி, மலர், ஆனந்த ராகம் போன்ற தொடர்களையும் ஒன்றன் பின் ஒன்றாக முடிக்க சன்டிவி திட்டமிட்டு இருக்கிறதாம். இதனால் இந்த தொடரின் ரசிகர்கள் பெரும் சோகத்தில் உள்ளனர். இருப்பினும் சிங்கபெண்னே மற்றும் கயல் சீரியல்களை நீட்டித்து இருப்பதால் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். மேலும் பல புதிய சீரியல்கள் வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

விளம்பரம்

Leave a Comment