தமிழ் சினிமா ரசிகர்கள் கொண்டாடும் நடிகர்களில் ஒருவர் தான் தளபதி விஜய். இவருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டமே சினிமாவில் உள்ளது. தற்போது அரசியலில் களம் இறங்கி இருக்கும் விஜய், ஒப்பந்தமாகி இருக்கும் படங்களை முடித்துவிட்டு முழு நேர அரசியலில் ஈடுபட உள்ளார். இவர் நடிப்பில் , இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான கோட் படம் மாபெரும் வரவேற்பினை ரசிகர்களிடம் பெற்று இருந்தது.

இவர் தற்போது ஒரு படத்தில் மட்டும் நடிக்க உள்ளார். இப்படம் குறித்து அப்டேட்டுக்கு ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் காத்து இருந்தனர். இந்நிலையில் அண்மையில் இப்படத்தின் அப்டேட் வெளியாகி இருந்தது. அதன்படி தளபதியின் 69 வது படத்தை இயக்குனர் ஹெச் வினோத் இயக்க உள்ளார். அனிருத் இப்படத்திற்கு இசையமைக்க இருக்கிறார்.இதனால் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.

மேலும் இப்படத்தில் கதாநாயகியாக யார் நடிப்பார் என ரசிகர்கள் ஆவலாக எதிர்பார்த்து காத்து இருந்த நிலையில், இப்படத்தில் பீஸ்ட் படத்தில் நடித்த நடிகை பூஜா ஹெக்ட் மீண்டும் தளபதி உடன் கதாநாயகியாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. தற்போது பூஜா ஹெக்டே சூர்யாவின் 44வது படத்தில் நடித்து வந்த நிலையில்,தற்போது அங்கு படப்பிடிப்பை முடித்துவிட்டு தளபதி 69ல் இணைந்து இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.