விஜய் டிவியில் கலக்கப்போவது யார் நிகழ்ச்சியில் போட்டியாளராக அறிமுகமாகியவர் அறந்தாங்கி நிஷா. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தனது நகைச்சுவையால் மக்களை அதிகம் சிரிக்க வைத்து இருந்தார். இவருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டமே இந்த நிகழ்ச்சி மூலம் உருவாகியது. சின்னத்திரையில் இருந்த இவர் தற்போது வெள்ளித்திரையிலும் படங்கள் நடித்து வருகிறார். மாரி படத்தில் நடித்து சினிமாவுக்கு அறிமுகமாகிய இவர், ஜெயிலர் மற்றும் ராயன் படங்களிலும் போலீசாக நடித்து அசத்தியுள்ளார்.

மேலும் விஜய் டிவியில் தொகுப்பாளராகவும் கலக்கி வருகிறார்.ஆரம்பத்தில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியது இவர் தான்.பின்னர் இந்த நிகழ்ச்சியை விட்டு வெளியேறி உள்ளார் அறந்தாங்கி நிஷா. தற்போது மிஸ்டர் சின்னத்திரை நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார் அறந்தாங்கி நிஷா . மேலும் சினிமா நிகழ்ச்சிகளையும் வெளியே தொகுத்து வழங்கி அசத்தி வருகிறார்.

இந்நிலையில் இவர் விஜய் டிவியை விட்டு வெளியேறியதாக புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். இது ரசிகர்களை கடுமையாக அதிர்ச்சியாக்கி உள்ளது.அந்த பதிவின் கீழ், இது தவறான செய்தி எனவும், நான் விஜய் டிவியை விட்டு போகவில்லை, கஷ்டப்பட்டு இந்த இடத்திற்கு வந்துள்ளேன் அதை கெடுத்துவிடாதீர்கள் என நகைச்சுவையாக பதிவிட்டு உள்ளார் அறந்தாங்கி நிஷா.
View this post on Instagram