தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருக்கும் நடிகர் ரஜினிகாந்த். உள்ளூர் முதல் உலக நாடு வரை இவருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டமே உள்ளது. தனது ஸ்டைல் மற்றும் நடிப்பினால் இன்று தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருந்து வருகிறார். இவர் தற்போது டிஜே ஞானவேல் இயக்கத்தில், வேட்டையன் படத்தில் நடித்து உள்ளார். இப்படம் வருகிற 10ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இப்படத்தின் ட்ரைலர் அண்மையில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று உள்ளது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இப்படத்தை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் நடிகர் சத்யராஜ், நாகர்ஜுனா என பலரும் நடித்து வருகின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு நடந்து வரும் நிலையில், நடிகர் ரஜினிகாந்திற்கு திடீரென உடல்நலம் முடியாமல் போய் உள்ளது. உடனே அவர் மருத்துவமனையில் கடந்த 30ஆம் தேதி அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு தற்போது நலமுடன் உள்ளார் ரஜினிகாந்த். இந்நிலையில் அவர் தற்போது வீடு திரும்பி உள்ளார். இந்த வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. ரஜினிகாந்த் வீடு திரும்பியதால் அவரது ரசிகர்கள் நிம்மதி பெருமூச்சு அடைந்து உள்ளனர்.
#SuperstarRajinikanth சிகிச்சை முடிந்து நலமுடன் வீடு திரும்பினார் 👍
pic.twitter.com/kZ1YMCrTmP— Prakash Mahadevan (@PrakashMahadev) October 4, 2024