தமிழ் சினிமாவில் தொகுப்பாளராக வாழ்க்கையை தொடங்கி இன்று உச்ச நட்சத்திரமாக உருவெடுத்து இருப்பவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவரின் கடின உழைப்புக்கு கிடைத்த ஊதியமே இவர் சினிமாவில் ஜொலிப்பது எனலாம். தொடர்ந்து நல்ல படங்களை கொடுத்து சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை தனக்கான கூட்டத்தை சினிமாவில் உருவாக்கி உள்ளார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இவருக்கு அடுத்ததாக இயக்குனர் ராஜ்குமார் இயக்கத்தில்,கமல்ஹாசன் தயாரிப்பில் அமரன் படம் வெளியாக உள்ளது. கதாநாயகியாக சாய்பல்லவி நடித்து உள்ளார். ஜிவி பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைத்து உள்ளார். வருகிற 31ஆம் தேதி தீபாவளியை முன்னிட்டு இப்படம் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.ரசிகர்கள் இப்படத்திற்கு பெரும் ஆவலுடன் காத்து உள்ளனர்.

உண்மையான ஆர்மி சோல்ஜர் கதையை படமாக்கி இருப்பதால் ரசிகர்கள் பெரும் ஆவலுடன் உள்ளனர். இப்படத்தின் மின்னலே முதல் பாடல் நாளை வெளியாக உள்ளது. இப்பாடலின் ப்ரோமோவை தற்போது படக்குழு வெளியிட்டுள்ளது. ப்ரோமோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று உள்ளது.
Embed Video Credits : SAREGAMA TAMIL