தொடர்களுக்கு பிரபலமான சேனல் என்றால் அது விஜய் தொலைக்காட்சி தான். இந்த தொடர்களுக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டம் உள்ளது. தற்போது அந்தவரிசையில் பிரபலமாகி வரும் தொடர்களில் ஒன்று தான் வீட்டுக்கு வீடு வாசப்படி. ஒரு குடும்பத்தில் நடக்கும் பிரச்சனைகளை எடுத்து காண்பிப்பதால் இந்த தொடருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளம் இருக்கிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டு உள்ளது.

இந்த தொடரின் புதிய ப்ரோமோ வெளியாகியுள்ளது. ப்ரோமோவில், அஜய் மற்றும் அஞ்சலியை குடும்பத்துடன் பார்வதி கஷ்டப்பட்டு மீண்டும் சேர்த்து வைக்கிறார். அவர்களை வீட்டிற்கும் திரும்ப அழைத்து வருகிறார். பார்வதி அஜய் மற்றும் அஞ்சலிக்கு ஆரத்தி எடுத்து அவரை வரவேற்கின்றனர். இதனை பார்த்துக்கொண்டு இருந்த பல்லவி பிரச்னையை பெருசாக்க முடிவு செய்கிறார்.

உடனே அங்கிருந்து பெட்டியை எடுத்துக்கொண்டு வெளியே செல்கிறார். அவரை அனைவரும் தடுக்க முயன்றும் அவர் வீட்டை விட்டு வெளியே செல்கிறார். இந்த ப்ரோமோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது. பல்லவி திரும்பவும் தனது வேலையை ஆரம்பித்துவிட்டதாக கருத்துக்களை கூறி வருகின்றனர்.
Embed Video Credits : VIJAY TELEVISION