தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கென்று ரசிகர்கள் மத்தியில் தனி வரவேற்பு உள்ளது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் இந்த பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு என்று மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டமே நாடு முழுவதும் இருக்கிறது. இதுவரை 7 சீசன்கள் தமிழில் முடிந்த நிலையில் 8வது சீசன் எப்பொழுது தொடங்கும் என மக்கள் பெரும் ஆவலாக எதிர்பார்த்து காத்து இருக்கும் நிலையில், நேற்று இந்த நிகழ்ச்சி தொடங்கி உள்ளது. பிக் பாஸ் ப்ரோமோ வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

தற்போது இந்த 8வது சீசனை விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார். நேற்று முதல் இந்த நிகழ்ச்சி ஆரம்பமாகி இருக்கிறது. போட்டியாளர்களாக தீபக், அர்னவ்,ரஞ்சித், ரவீந்தர் சந்திரசேகர், கானா ஜெப்ரி,விஜே விஷால், நான் முத்துக்குமரன்,சத்யா , அருண் பிரசாத், சௌந்தர்யா நஞ்சுந்தன்,சாச்சனா,அன்ஷிதா, சுனிதா , ஜாக்லின்,ஆர்ஜே ஆனந்தி, பவித்ரா ஜனனி, தர்ஷா குப்தா என 18 பேர் கலந்துகொண்டு உள்ளனர்.

தற்போது புதிய ப்ரோமோ வெளியாகியுள்ளது.ப்ரோமோவில்,பெண்கள் ஆண்களை நாமினேட் செய்யமாட்டார்கள் என எடுத்து இருக்கும் முடிவு தனக்கு பிடிக்கவில்லை என ஜாக்லின் ஆண்களிடம் வந்து சண்டையிடுகிறார். இப்படி முதல்நாளே மோதல் ஆரம்பித்து இருப்பது கடும் அதிர்ச்சியை ரசிகர்களிடம் ஏற்படுத்தி இருக்கிறது.
Embed Video Credits : VIJAY TELEVISION