ப்ரீ புக்கிங் மட்டும் இத்தனை கோடிகளா…! வசூலில் பட்டையை கிளப்பும் வேட்டையன்..! வெளியான முன்பதிவு விபரங்கள்…!

தமிழ் சினிமாவில் உச்சநடிகராக இருப்பவர் ரஜினிகாந்த். இவருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டமே உள்ளது. அண்மையில் இவருக்கு வெளியான ஜெயிலர் படம் மாபெரும் வசூலை வாரி குவித்தது. தற்போது நடிகர் ரஜினிகாந்த் இயக்குனர் டிஜே ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் படத்தில் நடித்து உள்ளார். இப்படத்தில் இவருடன் அமிதாப்பச்சன்,பகத் பாசில், அபிராமி , தூஸ்ரா விஜயன் ஆகியோர் நடித்து உள்ளனர்.

ப்ரீ புக்கிங் மட்டும் இத்தனை கோடிகளா...! வசூலில் பட்டையை கிளப்பும் வேட்டையன்..! வெளியான முன்பதிவு விபரங்கள்...! 1

விளம்பரம்

லைக்கா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்து உள்ளார். இயக்குனர் ஞானவேல் இயக்கிய ஜெய் பீம் படம் மாபெரும் வெற்றிபெற்ற நிலையில், சூப்பர் ஸ்டாரின் வேட்டையன் படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு உருவாகி இருக்கிறது. இப்படம் நாளை மறுநாள் 10ஆம் தேதி உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இப்படத்தை காண ரஜினி ரசிகர்கள் பெரும் ஆவலுடன் உள்ளனர்.

ப்ரீ புக்கிங் மட்டும் இத்தனை கோடிகளா...! வசூலில் பட்டையை கிளப்பும் வேட்டையன்..! வெளியான முன்பதிவு விபரங்கள்...! 3

விளம்பரம்

தற்போது இப்படத்தின் முன்பதிவுகள் பல திரையரங்குகளில் தொடங்கி நடைபெற்று வருகிறது. சூப்பர் ஸ்டாரின் வேட்டையன் படமானது அமெரிக்காவில் மட்டும் ப்ரீபுக்கிங்கில் ரூ . 40 கோடியும் அதே போல , இந்தியாவில் ரூ.8கோடி வரை வசூல் செய்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

விளம்பரம்

Leave a Comment