தமிழ் சினிமாவில் முன்னணி பாடகியாக வலம் வருபவர் பாடகி சைந்தவி. இவர் குரலுக்கு என்று மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டமே சினிமாவில் உள்ளது. பல ஹிட் பாடல்களை பாடி இருக்கிறார் பாடகி சைந்தவி.ஆரம்பத்தில் ஜிவி பிரகாஷ் உடன் இணைந்து பாடல்கள் பாடி வந்த நிலையில் இவர்களுக்கு இடையேயான நட்பு காதலாக மாறி பிறகு திருமணத்தில் முடிந்தது. இவர்களுக்கு மகள் ஒருவர் உள்ளார்.

தற்போது அண்மையில் இருவரும் விவாகரத்து செய்ய இருப்பதாக அறிவித்து இருந்தனர். இது இவர்களின் ரசிகர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. தற்போது இருவரும் பிரிந்து வாழ்ந்து வரும் நிலையில், கணவரை விட்டு பிரிந்த பிறகு தனது வேலைகளில் கவனம் செலுத்தி வருகிறார் பாடகி சைந்தவி. தற்போது அடிக்கடி போட்டோஷூட் எடுத்து கலக்கி வருகிறார்.

தற்போது இவர் வெளியிட்டுள்ள போட்டோஷூட் புகைப்படங்கள் இணையத்தில் கலக்கி வருகிறது. புகைப்படத்தில் சைந்தவி செம்ம கியூட்டாக இருப்பதாக ரசிகர்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
