தமிழ் சினிமாவுக்குள் அட்டகத்தி படத்தின் மூலம் அறிமுகமாகி ரசிகர்களிடம் பேராதரவினை பெற்றவர் தினேஷ். அட்டகத்தி பட வெற்றி இவரை முன்னணி நடிகராக சினிமாவில் உருவாக்கியது. பின்னர் தொடர்ந்து திருடன் போலீஸ், தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் , விசாரணை என ஹிட் படங்களை கொடுத்து தனக்கான நிரந்தர இடத்தை தமிழ் சினிமாவில் பிடித்தார். பல படங்களில் சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்து வந்த இவருக்கு இப்படம் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வரும் அட்டகத்தி தினேஷ் அண்மையில் ஜெ பேபி என்ற படத்தில் நடித்து இருந்தார். ஊர்வசி நடிப்பில் வெளியான இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அட்டகத்தி தினேஷ் அசத்தி இருந்தார். நீண்ட நாட்களுக்கு பிறகு நல்ல படத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்து இருந்தார் அட்டகத்தி தினேஷ். தற்போது இவர் நடிகர் ஹரிஷ் கல்யாண் உடன் இணைந்து லப்பர் பந்து என்ற படத்தில் நடித்து இருக்கிறார்.

இப்படம் திரையரங்கில் வெளியாகி ஹிட் அடித்து இருக்கும் நிலையில், தற்போது இப்படம் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது. வருகிற 31ஆம் தேதி தீபாவளியை முன்னிட்டு இப்படம் ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாகிறது. இதனை தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்து உள்ளது. இதனால் ரசிகர்கள் படத்தை மீண்டும் காண ஆவலுடன் உள்ளனர்.