பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் மகள் தான் அதிதி சங்கர். தெலுங்கு சினிமாவில் பாடகராக அறிமுகம் ஆகிய இவர் தற்போது தமிழ் சினிமாவில் கதாநாயகியாக கலக்கி வருகிறார். இவர் கதாநாயகியாக நடித்த விருமன் திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றது. இப்படத்தை தொடர்ந்து இவர் நடித்த மாவீரன் படம் இவருக்கு சூப்பர் டூப்பர் ஹிட் ஆக அமைந்தது. வரிசையாக கிடைத்த வெற்றிகளை தொடர்ந்து தமிழ் சினிமாவில் அடுத்தடுத்து படங்களில் நடித்து வருகிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இயக்குனர் விஷ்ணு வரதன் இயக்கத்தில் நேசிப்பாயா படத்தில் நடித்து உள்ளார். இப்படம் இவருக்கு அடுத்ததாக வெளியாக உள்ளது. இப்படத்தை தொடர்ந்து இவர் நடிகர் அர்ஜுன் தாஸ்க்கு ஜோடியாக ஒன்ஸ் மோர் படத்தில் நடித்து உள்ளார். விக்னேஷ் ஸ்ரீகாந்த் இப்படத்தியை இயக்கி உள்ளார்.ஹிஷாம் அப்துல் வஹாத் இப்படத்திற்கு இசையமைத்து உள்ளார்.

அண்மையில் இப்படத்தின் டீசர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது. தற்போது இப்படத்தின் பாடல் வெளியாகி உள்ளது. பாடல் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று இருக்கிறது.
Embed Video Credits : THINK MUSIC INDIA