தெலுங்கு சினிமாவை கலக்கிய தேவாரா படத்தின் OTT ரிலீஸ் எப்போது தெரியுமா..? வெளியான அசத்தல் தகவல்..!

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக ஜொலித்து வருபவர் என்டிஆர். இவருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டமே சினிமாவில் உள்ளது. இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் இவர் நடித்த RRR படம் ரசிகர்களிடம் மாபெரும் வரவேற்பினை பெற்றது. இப்படத்தின் மூலம் மிகப்பெரிய அளவு பான் இந்தியா நட்சத்திரமாக உருவெடுத்து உள்ளார் என்டிஆர்.

தெலுங்கு சினிமாவை கலக்கிய தேவாரா படத்தின் OTT ரிலீஸ் எப்போது தெரியுமா..? வெளியான அசத்தல் தகவல்..! 1

விளம்பரம்

இப்படத்திற்கு பிறகு நல்ல கதைக்காக காத்திருந்த இவர் தனது அடுத்த படத்திற்காக கோர்த்தால சிவாவை இயக்குனராக தேர்ந்தெடுத்துள்ளார். இவர் இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர் மற்றும் ஜான்வி கபூர் நடித்திருக்கும் படம் தான் தேவரா. இப்படத்திற்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டமே உருவாகி உள்ளது. படத்திற்கு அனிருத் இசையமைத்து உள்ளார்.

தெலுங்கு சினிமாவை கலக்கிய தேவாரா படத்தின் OTT ரிலீஸ் எப்போது தெரியுமா..? வெளியான அசத்தல் தகவல்..! 3

விளம்பரம்

இப்படம் கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி வெளியாகி தெலுங்கில் மிகப்பெரிய ஹிட் அடித்தது. சுமார் 200 கோடிக்கு மேல் இப்படம் வசூல் செய்து இருப்பதாக கூறப்படுகிறது. தற்போது இப்படம் எப்போது OTT-ல் வெளியாகும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்து இருக்கின்றனர். இந்நிலையில் இப்படம் நவம்பர் மாதம் 8 ஆம் தேதி நெட்பிளிக்ஸ் OTT தளத்தில் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

விளம்பரம்

Leave a Comment