நடிகர் விஜய் தமிழ் சினிமா ரசிகர்களால் கொண்டாடப்படும் மிகப்பெரிய நடிகராக உள்ளார். இவருக்கு தமிழில் மட்டுமின்றி தெலுங்கு , மலையாள சினிமாவிலும் ரசிகர்கள் பலரும் உள்ளனர். இவரின் படங்கள் வெளியாகும் நாள் தான் ரசிகர்களுக்கு தீபாவளி பொங்கல் என்று சொல்லலாம். அந்தளவிற்கு நடிகர் விஜய் மீது ரசிகர்கள் உயிரையே வைத்து உள்ளனர். இவரின் படங்கள் வெளியாகி ஓரிரு நாட்களிலேயே நூறு கோடி வசூலை தொடும் என்றால் இவர் எவ்வளவு பெரிய நடிகர் என்பதை அனைவரும் தெரிந்திருக்க வேண்டும். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

தற்போது நடிகர் விஜய் நடிப்பை விட்டுவிட்டு மக்களுக்காக அரசியலை கையிலெடுத்து உள்ளார். இதனால் சினிமாவை விட்டு முற்றிலும் விலக இருக்கிறார் விஜய். முழு நேர அரசியலில் ஈடுபட்டு மக்களுக்காக நல்லதுகளை செய்ய களம் இறங்கி இருக்கிறார். 2026ஆம் தேதி சட்டமன்ற தேர்தலில் போட்டி என நடிகர் விஜய் தனது தமிழக வெற்றிக் கழக கட்சியை அறிமுகப்படுத்தி அறிவித்துள்ளார்.

இன்று விழுப்புரத்தில் பிரம்மாண்ட மாநாட்டை நடத்தி வருகிறார் விஜய். இதில் அவர் சொன்ன குட்டி ஸ்டோரி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று உள்ளது. ரசிகர்கள் விஜய் சொன்ன ஸ்டோரியை கேட்டு மகிழ்ச்சியில் ஆர்ப்பரித்து உள்ளனர். இந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் பெருமளவு வைரலாகி வருகிறது.
Embed Video Credits : SUN NEWS