மேஜர் முகுந்த் நினைவிடத்தில் மரியாதை செய்த நடிகை சாய்பல்லவி…!

ப்ரேமம் படத்தில் நடித்து மலர் டீச்சராக இளைஞர்களின் மனதில் நீங்காத இடத்தை பிடித்தவர் சாய் பல்லவி. இப்படம் இவருக்கு மிகப்பெரிய வெற்றியை மலையாள சினிமாவில் மட்டுமில்லாமல் தமிழ் சினிமாவில் பெற்றுக்கொடுத்தது. தற்போது இவர் தெலுங்கிலும் தொடர்ந்து படங்கள் நடித்து அசத்தி வருகிறார். முன்னணி நடிகையாக உருவெடுத்து இருக்கும் சாய் பல்லவி அடுத்தடுத்து தமிழ் படங்களில் ஒப்பந்தமாகி பிசியாக உள்ளார்.

மேஜர் முகுந்த் நினைவிடத்தில் மரியாதை செய்த நடிகை சாய்பல்லவி...! 1

விளம்பரம்

தற்போது இவர் அமரன் படத்தில் நடித்து உள்ளார்.இயக்குனர் ராஜ்குமார் இயக்கத்தில்,கமல்ஹாசன் தயாரிப்பில் அமரன் படம் வெளியாக உள்ளது. ஜிவி பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைத்து உள்ளார். வருகிற 31ஆம் தேதி தீபாவளியை முன்னிட்டு இப்படம் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.ரசிகர்கள் இப்படத்திற்கு பெரும் ஆவலுடன் காத்து உள்ளனர். தற்போது இப்படத்தின் ப்ரோமோஷனில் கலந்து உள்ளார் சாய் பல்லவி.

மேஜர் முகுந்த் நினைவிடத்தில் மரியாதை செய்த நடிகை சாய்பல்லவி...! 3

விளம்பரம்

இந்நிலையில் டெல்லியில் உள்ள மேஜர் முகுந்த் நினைவிடத்தில் நடிகை சாய் பல்லவி நேரில் சென்று மரியாதை செலுத்தியுள்ளார். பின்னர் தனது படத்திற்கான பணிகளை செய்ய தொடங்கி உள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் பெருமளவு வைரலாகி வருகிறது.

தொடர்புடையவை  உள்ளூர் சேனலில் பரப்பப்படும் தர்பார்

மேஜர் முகுந்த் நினைவிடத்தில் மரியாதை செய்த நடிகை சாய்பல்லவி...! 5

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment