மேஜர் முகுந்த் ஆக வாழ்ந்த சிவகார்த்திகேயன்..! அமரன் திரை விமர்சனம்..!

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில், இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் கமல்ஹாசன் தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் அமரன். இப்படத்தில் கதாநாயகியாக சாய் பல்லவி நடித்து உள்ளார். இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்து உள்ளார். மேஜர் முகுந்த் வாழ்க்கை வரலாற்றை கொண்டு இப்படத்தினை இயக்கி உள்ளனர். பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் இன்று திரையரங்குகளில் வெளியான இப்படம் குறித்த விமர்சனங்களை இங்கே காணலாம்.

மேஜர் முகுந்த் ஆக வாழ்ந்த சிவகார்த்திகேயன்..! அமரன் திரை விமர்சனம்..! 1

விளம்பரம்

படத்தின் கதை

நிஜமான ராணுவ வீரர் மேஜர் முகுந்த் வாழ்க்கையை மையமாக கொண்டு படம் எடுக்கப்பட்டு உள்ளது. மெட்ராஸ் கிறிஸ்தவ கல்லூரியில் சீனியராக வரும் முகுந்த், சாய்பல்லவிக்கு ரேம்ப் வாக் போட்டியில் கலந்துகொள்ள பயிற்சி அளிக்கிறார். இருவருக்கும் இடையேயான நாட்பு காதலாக மாறி கல்யாணம் செய்து கொள்கின்றனர். ராணுவ வீரராக வரும் சிவகார்த்திகேயன்,கேப்டன் , மேஜர் என அடுத்தடுத்து பதவி உயர்ந்து, 44 ராஷ்ட்ரிய ரைஃபில்ஸ் படைப்பிரிவின் கம்பேனி கமாண்டராக பொறுப்பேற்கிறார். காஷ்மீரில் உள்ள தீவிரவாதி அல்தாப் வானியை பிடிக்கும் பொழுது உயிரிழக்கிறார் முகுந்த்.

விளம்பரம்
தொடர்புடையவை  அக்கா வாங்க ஒரு போட்டோ எடுத்துக்கலாம்.! ராதிகா தோள் மீது கை போட்டு செம்ம கூலாக போஸ் கொடுத்த தளபதி.!

மேஜர் முகுந்த் ஆக வாழ்ந்த சிவகார்த்திகேயன்..! அமரன் திரை விமர்சனம்..! 3

படத்தின் விமர்சனம்

விளம்பரம்

காஷ்மீரின் அரசியல் சூழ்நிலையில் தீவிரவாதத்திற்குள் ஆழமாக அதிகம் செல்லாமல், அதை எதிர்த்து போராடிய மேஜர் முகுந்த் தனிப்பட்ட வாழ்க்கையை அழகாக காட்டி உள்ளார் ராஜ்குமார் பெரியசாமி. சினிமா என்பதால் எந்த பில்டப்பும் கொடுக்காமல் படத்தை எதார்த்தமாக எடுத்து இருப்பதே படத்தின் மிகப்பெரிய பிளஸ் ஆக அமைந்து உள்ளது. கதையில் தேவையான இடங்களில் மாஸ் காட்சிகள் வைத்து இருப்பது ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது. படத்தில் மேஜர் முகுந்த் ஆக சிவகார்த்திகேயன் நடித்தார் என்பதற்கு பதிலாக வாழ்ந்தார் என கூறலாம். சிவகார்த்திகேயன் மற்றும் சாய்பல்லவி இடையேயான காதல் காட்சிகள் உண்மையான முகுந்த் மற்றும் இந்துவை கண் முன் நிறுத்துகிறது.ஜிவி பிரகாஷின் இசை கதைக்கு அதிக பலத்தை சேர்த்து இருக்கிறது.

விளம்பரம்

Leave a Comment