தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர். இவர் இயக்கத்தில் நடிப்பதற்கு பல முன்னணி நடிகர்கள் ஆவலுடன் காத்து இருக்கின்றனர். பல வெற்றிப்படங்களை பிரம்மாண்டமாக கொடுத்து முன்னணி இயக்குனராக சினிமாவில் ஜொலித்து வருகிறார் ஷங்கர். இவர் இயக்கத்தில் பெரும் எதிர்பார்ப்புடன் வெளியான இந்தியன் 2 மிகவும் மோசமான விமர்சனங்களை ரசிகர்களிடம் பெற்று இருந்தது. இப்படத்தின் அடுத்த பாகத்திற்கு ரசிகர்கள் காத்து உள்ளனர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இப்படத்தை தொடர்ந்து தெலுங்கில் ராம் சரணை வைத்து கேம் சேஞ்சர் என்ற படத்தினை இயக்கி உள்ளார். இந்தியன் படத்தின் தோல்வி, கேம் சேஞ்சர் படத்தின் மீது ரசிகர்களுக்கு கடும் அச்சத்தை உருவாக்கி உள்ளது. இப்படத்தில் கதாநாயகியாக கியாரா அத்வனி நடித்து உள்ளார். தமன் இப்படத்திற்கு இசையமைத்து உள்ளார். இப்படத்தின் முதல் பாடல் அண்மையில் வெளியாகி இருந்தது.

தற்போது இப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது. ரசிகர்கள் டீசரை கொண்டாடி வருகின்றனர்.RRR படத்திற்கு பிறகு ராம் சரணுக்கு இப்படம் வெளியாக உள்ளதால் பெரும் எதிர்பார்ப்பு உருவாகி உள்ளது.
Embed Video Credits : SAREGAMA TAMIL