அத்தியாவசிய பொருட்களின் சந்தை வீழ்ச்சி!

நம் அன்றாட வாழ்வில் முக்கியமானது அதிவேக நுகர்வோர் பொருட்கள் துறை. தினசரி வாழ்விற்கு தேவைப்படும் பொருட்கள் இந்த துறைக்குள் அடங்கிவிடும். தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார மந்த நிலை மற்றும் வாங்கும் தன்மையின் பற்றாக்குறையால் இத்துறை இந்தாண்டு வீழ்ச்சியடைந்திருக்கிறது.

அத்தியாவசிய பொருட்களின் சந்தை வீழ்ச்சி! 1

2019ஆம் ஆண்டிற்கான வளர்ச்சியாக 9 முதல் 10 சதவிகித வளர்ச்சியே காணப்படும் என ஆய்வு நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. கிராமப்புறதில் இத்துறை 20 சதவிகிதாமாக இருந்ததாகவும், அது தற்போது 5 சதவிகிதத்திற்கும் கீழ் குறைந்து போய் இருப்பதாகவும், கடந்த 7 ஆண்டுகளில் சந்திக்காத வீழ்ச்சி எனவும் நீல்சன் என்னும் ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.

விளம்பரம்

“தாராளமயமாக்கலுக்குப் பின்னர், இந்தத் துறை வளர்ச்சியில் குறிப்பிடத்தக்க பங்களிப்பு இரட்டை இலக்க வளர்ச்சியைத் தக்க வைத்துக் வந்துள்ளது. ஆனால் தற்போது ஏற்பட்டுள்ள மந்த நிலையால் குறிப்பிடத்தக்க அளவில் பாதிக்கப்படுவதாக” எஃப்.எம்.சி.ஜி நிர்வாக இயக்குனர் பாரத் பூரி கூறுகிறார்.

மேலும், “நகர்புறத்தை விட கிராமப்புறத்தில் சந்தை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. இது கிராமப்புற சந்தையை மட்டுமே நம்பி இருக்கும் நிறுவனங்களுக்கு பெரும் அழுத்தத்தை கொடுக்கும்” எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment