விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல தொடர் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த தொடருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டம் உள்ள நிலையில், தற்போது தொடரின் இரண்டாவது சீசன் ரசிகர்களுக்காக இயக்கப்பட்டு ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. முதல் சீசனை போலவே இந்த சீசனுக்கும் மக்கள் பேராதரவை கொடுத்து வருகின்றனர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த தொடரின் புதிய ப்ரோமோ வெளியாகி உள்ளது. ப்ரோமோவில், ராஜி டியூசன் எடுக்க கிளம்பும் நேரத்தில் அவரது சித்தப்பா நக்கலாக ராஜியை பேசுகிறார். இதனால் கடுப்பாகிய ராஜி நேராக அவரிடம் சென்று, தான் உழைத்து சம்பாதிப்பதாகவும், உங்களை போல வட்டிக்குவிட்டு சம்பாதிக்கவில்லை என சித்தப்பாவை அசிங்கப்படுத்துகிறார். இதனால் சித்தப்பா கடும் கோபத்தில் உள்ளார்.

சித்தப்பாவை கடுப்பாக்கிய சந்தோஷத்தில் ராஜி, கதிர் உடன் சைக்கிளில் டியூசன் எடுக்க செல்கிறார். இந்த ப்ரோமோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.
Embed Video Credits : VIJAY TELEVISION