கடன் வழங்க கூட வழியில்லாமல் இந்திய பொருளாதாரம்: பிட்ச் நிறுவனம்!

இந்தியா மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி விகிதத்தை மாற்றி அமைத்து பிட்ச் ரேட்டிங் நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்தியாவின் பொருளாதாரம் மந்த நிலையில் நகர்ந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே பல ஆய்வுகள் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியை குறைத்து மதிப்பிட்டுள்ளன. அதேபோல், சர்வதேச நாணய நிதியத்தின் மூத்த பொருளாதார ஆலோசகரான கீதா கோபிநாத், இந்தியாவின் பொருளாதார வீழ்ச்சிக்கு நிதி துறையே காரணம் என கூறியிருந்தார்.

விளம்பரம்
India economy slowdown:Fitch

இதன் தொடர்ச்சியாக, பொருளாதார ஆய்வு நிறுவனமான பிட்ச் ரேட்டிங் தனது முதல் அறிக்கையில், 2019-20 நிதியாண்டில் இந்தியா 5.6 சதவீத வளர்ச்சியைக் கொண்டிருக்கும் என்று தெரிவித்திருந்த நிலையில், தற்போதைய அறிக்கையில், வெறும் 4.6 சதவீத வளர்ச்சி மட்டுமே இருக்கும் என்று குறைத்துள்ளது.

“வங்கி சாரா நிதி நிறுவனங்களில் ஏற்பட்டுள்ள சிக்கல், கடன் கிடைப்பதில் எழுந்துள்ள சிக்கல், மற்றும் மக்களிடையே குறைந்துள்ள நுகர்வுத் தன்மை போன்றவை இந்தியாவில் வளர்ச்சி குறைந்து வருவதற்கான காரணங்கள்” என பிட்ச் ரேட்டிங் நிறுவனம் தெரிவித்துள்ளது.

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment