குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக கேரளா ஜோடியின் நூதன முறையிலான எதிர்ப்பு!

குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ) மற்றும் குடிமக்களின் தேசிய பதிவு (என்ஆர்சி) ஆகியவற்றை எதிர்த்து மக்கள் தற்போது வீதிகளில் இறங்கி போராடி வருகிறார்கள். இவர்களுள் ஒரு ஜோடி தங்களது எதிர்ப்பை நூதன முறையில் வெளிப்படுத்தி இருப்பது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

கேரளத்தில் ஜி.எல்.அருண் கோபி மற்றும் ஆஷா சேகர் ஆகியோர் வரும் 2020 ஜனவரி 21 ஆம் தேதி திருமணம் செய்து கொள்ள உள்ளனர். இதனால் திருமணத்திற்கு முந்தைய படப்பிடிப்பு நடந்துள்ளது. இதில் தான் வித்தியாசமான முறையில் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.

விளம்பரம்
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக கேரளா ஜோடியின் நூதன முறையிலான எதிர்ப்பு! 1
கேரளா ஜோடி

இதில், அருண் கோபி, ‘சி.ஏ.ஏ வேண்டாம்’ என்ற பதாகையும், ஆஷா சேகர் ‘என்.ஆர்.சி வேண்டாம்’ என்ற பதாகையும் ஏந்தியபடி புகைப்படத்திற்கு போஸ் கொடுத்துள்ளனர். இந்த புகைப்படமே சமூக ஊடகங்களில் தற்போது வைரலாகி வருகிறது.

விளம்பரம்

Leave a Comment