பிகில் படத்தின் ‘உனக்காக’ என்ற மெலடி பாடல் வெளியானது.

பிகில் படத்தின் ‘உனக்காக’ என்ற மெலடி பாடல் வெளியானது. 1

விஜய் நடித்து வரும் பிகில் என்ற படத்தின் இசை வெளியீட்டு விழா நாளை நடைபெற உள்ள நிலையில் நேற்று மாலை 4:30 மணிக்கு உனக்காக என்ற மற்றொரு பாடலை வெளியிட்டுள்ளது. இது ஏ ஆர் ரஹ்மானின் அசத்தல் மெலடி என்று ரசிகர்கள் மத்தியில் சிறந்த வரவேற்பு பெற்றுள்ளது.

அட்லி இயக்கத்தில் ஏ.ஜி.எஸ். என்ற நிறுவனம் இப்படத்தை தயாரித்து வருகிறது. இப்படத்தில் விஜய் மற்றும் நயன்தாரா முன்னணி கதாநாயகர்களாக நடித்து வருகின்றனர். ஏற்கனவே இத்திரைப்படத்தின் சிங்கப்பெண்ணே, வெறித்தனம் ஆகிய இரண்டு பாடல்களும் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றள்ளது. இந்நிலையில் இப்படத்தின் மூன்றாவது பாடலை வெளியிட்டுள்ள படக்குழு இந்த பாடலுக்கு உனக்காக என்று பெயரிடடிருக்கிறது. இந்த பாடலை பாடலாசிரியர் விவேக் எழுதியுள்ளார்.நெஞ்சை உருக்கும் ரஹ்மானின் மெலடியை ஸ்ரீகாந்த் ஹரிஹரன் மற்றூம் மதுரா தாரா தல்லூரி பாடியுள்ளனர்.

விளம்பரம்

பிகில் படத்தின் இசை வெளியீட்டு விழா நாளை சென்னையிலுள்ள சாய் ராம் தனியார் கல்லூரியில் மாலை மிக விமர்சையாக நடைபெற உள்ளது . இதில் பிகில் படத்திலுள்ள அனைத்து பாடல்களும் ரஹ்மானின் இசை நிகழ்ச்சியில் கேட்கலாம் என்று சொல்லப்படுகிறது. இந்நிகழ்ச்சியில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் வெறித்தனம் பாடலை விஜய் மேடையில் பாட இருக்கிறார் எனவும் சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.  

விளம்பரம்

Leave a Comment