தம்பி, ஹீரோ படம்! இணையத்தளத்தில் வெளியீடு படக்குழுவினர் அதிர்ச்சி!!

தம்பி, ஹீரோ படம்! இணையத்தளத்தில் வெளியீடு படக்குழுவினர் அதிர்ச்சி!! 1

தம்பி, ஹீரோ படம் கடந்த வாரம் வெள்ளிக்கிழமை வெளியாகி உள்ளது. இதை தொடர்ந்து இந்த படம் இணையத்தில் வெளியாகி படக்குழுவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதை தடுக்க தயாரிப்பாளர் சங்கம் கடும் நடவடிக்கை எடுத்தது. தியேட்டர்களில் கேமரா கொண்டு செல்ல தடை விதித்தனர். கண்காணிப்பு கேமராவும் பொருத்தப்பட்டன.

எந்த நடவடிக்கையும் இவர்களுக்கு பலன் அளிக்கவில்லை. முன்னணி நடிகர்களான ரஜினிகாந்த், விஜய், அஜித்குமார், சூர்யா, விக்ரம், கார்த்தி, விஷால் உள்ளிட்ட நடிகர்கள் படங்களும் திரைக்கு வந்த உடனேயே இணையதளத்திலும் வெளிவந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

விளம்பரம்

இதேபோன்று தனுஷ், விஜய் சேதுபதி ஆகியோரின் படங்களையும் தியேட்டருக்கு வந்த உடனேயே சுடச்சுட இணையதளத்தில் திருட்டுத்தனமாக வெளியிட்டிருக்கிறார்கள். இதை கட்டுப்படுத்த முடியாமல் தயாரிப்பாளர்கள் தவிக்கின்றனர். இதை தொடர்ந்து இரண்டு நாட்கள் முன்பு வெளியான நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த ஹீரோ படமும், நடிகர் கார்த்தி நடித்த தம்பி படமும் இணையதளத்தில் திருட்டுத்தனமாக வெளியாகி படக்குழுவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதை பலரும் பதிவிறக்கம் செய்து பார்த்து வருகின்றனர். இதனால் வசூல் பாதிக்கும் என்ற கவலையில் படக்குழுவினர் உள்ளனர். இதேபோல் வெளிவரும் புதிய படங்களை இணையதளத்தில் வெளியிடக்கூடாது என்று கோர்ட்டு தடை உத்தரவு பிறப்பித்தும் அதையும் மீறி இணையதளத்தில் வருவது தொடர் கதையாகி வருகிறது.

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment