கேரளா பத்திரிகையாளர்கள் தாக்கப்பட்டதற்கு கண்டனம்!

மங்களூரில் பத்திரிகையாளர்கள் மீது அடக்குமுறையை கையாண்ட காவல்துறைக்கு இந்திய ஆங்கில எழுத்தாளர்கள், தொகுப்பாளர்கள் மற்றும் விமர்சகர்களின் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.

திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பாஜக ஆளும் மாநிலங்களில் போராட்டக்காரர்களுக்கு எதிராக பயங்கரமான அடக்குமுறையை காவல்துறை கையாண்டது. இதனால் போராட்டம் கலவரமாக மாறவே, காவல்துறை துப்பாக்கி சூடு நடத்தியது. இதில் மங்களூரில் 4 பேரும், உத்திர பிரதேச மாநிலத்தில் 16 பேரும் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

விளம்பரம்
கேரளா பத்திரிகையாளர்கள் தாக்கப்பட்டதற்கு கண்டனம்! 1
கேரளா பத்திரிகையாளர்களை மீது அடக்குமுறையை ஏவிய காவல்துறை

இதனை தொடர்ந்து, கேரளா மாநிலத்தை சேர்ந்த பத்திரிகையாளர்கள் செய்திகளை சேகரிப்பதற்காக மங்களூருக்கு சென்றிருந்தனர். அவள்களும் 8 பத்திரிகையாளர்களை மங்களூர் காவல்துறையினர் கைது செய்தனர்.

இது நாடு முழுவதும் அதிர்ச்சிக்கு உள்ளாகியது. சமீபத்தில் துப்பாக்கி சூட்டில் பலியானவர்களின் குடும்பங்களை சந்திப்பதற்காக சென்றிருந்த காங்கிரஸ் மூத்த தலைவர்களை மங்களூர் காவல்துறையினர் திரும்பி அனுப்பினர்.

விளம்பரம்

எனவே, மங்களூரில் பத்திரிகையாளர்களை கைது செய்த காவல்துறைக்கு எதிராக இந்திய ஆங்கில எழுத்தாளர்கள், தொகுப்பாளர்கள் மற்றும் விமர்சகர்களின் சங்கம் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், “அரசியலமைப்பின் ஒரு பகுதியாக தகவலை சேகரித்தல் மற்றும் அதனை மக்களுக்கு கொண்டு சேர்ப்பது கடமையாகும். அவ்வாறு கடமையில் உள்ள பத்திரிகையாளர்கள் மீது வன்முறையை ஏவுவதும், உடல் ரீதியாக தாக்குவதும் ஜனநாயகம் மற்றும் ஊடகத்தின் குரவளையை நெறிப்பதாகும். தற்போதைய காலத்தின் தேவையே பாதுகாப்பை உறுதி செய்வதாகும். இது தங்களது கடமையில் இருக்கும் பத்திரிகையாளர்களுக்கு எதிராக வன்முறை மற்றும் மிருகத்தனமான செயல்களை ஏவுவது குறிக்கோளாக இருக்கக் கூடாது” என தெரிவித்துள்ளது.

தொடர்புடையவை  வளிமண்டல சுழற்சியினால் அடுத்த 2 நாட்களுக்கு மழை! டெல்டா மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்!!

பத்திரையாளர்கள் கைது செய்யப்பட்ட செய்தியை அறிந்ததும், கேரளா முதல்வர் பினராயி விஜயனின் தலையீட்டிற்குப் பிறகு அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment