வருமான ஏற்றத்தாழ்வு வளர்ச்சிக்கு உதவுமா!

கடந்த 20 ஆண்டுகளாக இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி அதிகரித்தது நமக்கு நினைவிருக்கும். ஆனால் மற்றோரு புறம் உலகின் மற்ற நாடுகளுடன் ஒப்பீடும் போது, இந்தியாவின் வளர்ச்சி சமமற்ற நிலையில் இருப்பதாக ஐக்கிய நாடுகள் சபையின் 2019 ஆண்டிற்கான மனிதவள மேம்பாட்டு அறிக்கை தெரிவித்துள்ளது.

மனித வளர்ச்சியில் உள்ள ஏற்றத்தாழ்வுகள்” குறித்து ஆராய்ச்சி செய்துள்ள இந்த அறிக்கை, 1980ஆம் ஆண்டிற்கு பிறகு பெரும்பாலான பிராந்தியங்களில் 10 சதவிகிதம் அளவிலான பொருளாதார ஏற்றத்தாழ்வு அதிகரித்து இருப்பதாக கூறியுள்ளது.

விளம்பரம்

கடந்த 5 ஆண்டுகளில் ரசியா கூட்டைமைப்பின் பொருளாதார சமமற்ற நிலை உயர்ந்திருக்கிறது. இதேபோலவே அமெரிக்கா மற்றும் இந்தியாவில் இந்த உருவாகி இருக்கிறது. சீனாவிலும் 2000களில் சமத்துவமின்மை உறுதிபெற்றுள்ளது எனவும் இந்த அறிக்கை கூறியுள்ளது.

வருமான ஏற்றத்தாழ்வு வளர்ச்சிக்கு உதவுமா! 1

இந்தியாவில் 2000 மற்றும் 2007ஆம் ஆண்டுகளுக்கு இடையில் சமத்துவயின்மை அதிகரித்து உள்ளது. நாட்டின் வருமானத்தின் சராசரி 122 சதவிகிதமாக இருக்கும் போது, ஒரு சதவிகித மக்கள் ஈட்டும் வருமானம் 213 சதவிகிதமாக வளர்ந்துள்ளது. அதே நேரத்தில் 40 சதவிகித மக்கள் ஈட்டும் வருமானம் வெறும் 58 சதவிகித அளவே இருக்கிறது.

விளம்பரம்
தொடர்புடையவை  ஜி.எஸ்.டி செலுத்துவோருக்கு லாட்டரி பரிசு!

இந்த அதீத வேறுபாடு 2007 முதல் 2018ஆம் ஆண்டுகளுக்கு இடையில் குறைந்துள்ளது. ஒரு சதவிகிதத்தினரின் வருமானம் வளர்ச்சி 68 சதவிகிதமாகவும், 40 சதவிகித மக்களின் வருமானம் 41 சதவிகிதமாகவும் உயர்ந்துள்ளது.

நிர்வாக வரி தொடர்பான தரவுகளை ஆராய்ந்ததில், ஒரு சதவிகித மக்களின் வருமான பங்கு 20 சதவீதத்திற்கு அருகில் உள்ளது. இந்தியாவின் 10 சதவிகித மக்கள் சுமார் 55 சதவிகித வருமானத்தை பெற்றுள்ளதாகவும் இந்த அறிக்கை கூறுகிறது.

விளம்பரம்

இவ்வாறாக இந்தியாவில் ஏற்றத்தாழ்வுகள் நிலவி வரும் நிலையில், தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மற்றும் பிற பிறப்படுத்தப்பட்ட மக்களின் கல்வி தரம் மிகவும் குறைந்து போய் இருக்கிறது என்பதை இந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

வருமான ஏற்றத்தாழ்வு வளர்ச்சிக்கு உதவுமா! 3

உதாரணமாக, இவர்கள் 5 முதல் 12ஆம் வகுப்பு வரைகல்வி கற்றவர்களின் எண்ணிக்கை பிற சமூக மக்களோடு ஒப்பிட்டால் மிக குறைவாகவேஇருந்திருக்கிறது. மேலும், தொலைபேசிகள் இன்று சமூகத்தில் அதிகளவு ஊடுருவி இருக்கும் நிலையிலும், கணனி மற்றும் தொலைபேசி ஆகியவற்றை கையாளுவதற்கான குறைவாகவே இருந்திருக்கிறது.

விளம்பரம்

ஆனால் தற்போது ஒரு ஒருங்கிணைப்பு ஏற்பட்டு வரலாற்று ரீதியாக ஓரங்கட்டப்பட்ட குழுக்களின் கல்வி மற்றும் கைபேசி திறன் முன்னேற்றம் கண்டுள்ளதாக இந்த ஆய்வு கூறுகிறது. இருப்பினும், 2005ஆம் ஆண்டிற்கு பிறகு ஒடுக்கப்பட்ட குழுக்களின் கல்வி நிலை வளர்ந்திருந்தாலும், கல்லூரி போன்ற மேற்படிப்புகளில் மற்ற குழுக்களோடு ஒப்பிடும் போது விகிதாசாரங்கள் குறைவாகவே இருக்கிறது. ஒடுக்கப்பட்ட இனங்கள் இன்னும் பின் தங்கியே இருப்பதாக ஆய்வு சொல்கிறது.

தொடர்புடையவை  புதிய தொழில்சாலையை தொடங்கயுள்ள சுந்தரம் ஃபாஸனா்ஸ்
வருமான ஏற்றத்தாழ்வு வளர்ச்சிக்கு உதவுமா! 5

மேலும், 1980 முதல் 2016ஆம் ஆண்டு வரையில் உலகளாவிய வருமானத்தில் ஒரு சதவிகிதம் பேர் சுமார் 27 வளத்தை பெற்றுள்ளனர். 12 சதவிகிதம் பேர் 50 சதவிகிதம் அளவிலான வருமானத்தை கட்டுக்குள் வைத்துள்ளனர். இதில் இந்தியா மற்றும் சீனா போன்ற நாடுகளின் பெயரும் இடம்பெறுகிறது.

விளம்பரம்

“உலகளாவிய வளத்தின் பெரும் பங்கினை ஒரு குறிப்பிட்ட சதவிகிதம் மக்கள் கையில் வைத்திருக்கிறார்கள். இவ்வாறு இருக்கையில் இவர்களின் கீழ் வளர்ச்சியை எதிர்பார்ப்பது எவ்வாறு சாத்திமாகும்?”

அதிகளவிலான வருமான வளர்ச்சி, சரியான அளவிற்கு கீழ் நோக்கி செல்லவில்லை என்பதை இந்த ஆய்வு நமக்கு தெரிவுபடுத்துகிறது.

விளம்பரம்

Leave a Comment