கிரிக்கெட் வீராங்கனை படத்தில் அனுஷ்கா!

கிரிக்கெட் வீராங்கனை ஒருவரின் வாழ்க்கை படமாக இருக்கிறது. அதில் பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மா நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

சமீப காலமாக விளையாட்டு துறையில் சாதனை படைத்தவர்களின் வாழ்க்கை படமாக உருவாவது அதிகரித்து வருகிறது.

விளம்பரம்

தடகள வீரர் மில்கா சிங், மேரி கோம், தோனி குறித்து வெளியான படங்கள் வசூலில் சாதனை படைத்தன. சச்சின் படமும் வெளியானது. தற்போது கபில் தேவ் (கிரிக்கெட்), சாய்னா நேவல் (பாட்மின்டன்) குறித்து படங்கள் தயாராகி வருகின்றன. 

கிரிக்கெட் வீராங்கனை படத்தில் அனுஷ்கா! 1
அனுஷ்கா சர்மா மற்றும் ஜூலன் கோஸ்வாமி

இந்த வரிசையில் இந்திய பெண்கள் கிரிக்கெட் வேகப்பந்து வீச்சாளர் ஜூலன் கோஸ்வாமி (37) பயோபிக் உருவாகிறது. ஒருநாள் போட்டிகளில் 200க்கும் அதிகமான விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். பின் வரிசையில் பேட்டிங்கிலும் கைகொடுப்பார். தற்போது ஒருநாள் போட்டிகளில் மட்டும் பங்கேற்று வருகிறார். 

விளம்பரம்

‘சதாக் எக்ஸ்பிரஸ்’ என்று அழைக்கப்படும் இவரது வாழ்க்கை குறித்து சினிமா தயாராக உள்ளது. இதில் ஜூலன் வேடத்தில் அனுஷ்கா சர்மா நடிக்க உள்ளதாக தெரிகிறது. படப்பிடிப்புக்காக அனுஷ்கா சர்மா, கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்துக்கு செல்லவுள்ளார்.

தொடர்புடையவை  கண்ணாலேயே கொல்லுராங்களே நம்ம தலைவி.! ஸ்பெயினில் நயனின் அழகிய புகைப்படங்கள்

இதேபோல் மித்தாலி ராஜ் பயோபிக்கில் டாப்சி நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment