மகாராஷ்டிரா மற்றும் ஹரியானாவில் சட்ட சபை தேர்தல் தேதி அறிவிப்பு!!

மகாராஷ்டிரா மற்றும் ஹரியானாவில் சட்ட சபை தேர்தல் தேதி அறிவிப்பு!! 1

வருகிற அக்டோபர், 21ம் தேதி, மஹாராஷ்டிரா மற்றும் ஹரியானா மாநிலங்களில் சட்டசபை தேர்தல்களோடு, நாடு முழுவதும், 18 மாநிலங்களில் உள்ள, 64 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்களும், ஒரே கட்டமாக நடத்தப்படும்’ என, தலைமை தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

மஹாராஷ்டிரா, ஹரியானா, ஜார்க்கண்ட் ஆகிய மூன்று மாநிலங்களுக்கான சட்ட சபைகளுக்கான ஆயுட்காலம் முடிவடைய உள்ளதால், ஜார்க்கண்டை தவிர்த்து, மஹாராஷ்டிரா மற்றும் ஹரியானா மாநிலங்களுக்கான தேர்தல் தேதிகளை, தலைமை தேர்தல் ஆணையர், சுனில் அரோரா நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இது குறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் : ஹரியானா சட்டசபைக்கான ஆயுட்காலம், நவம்பர், 2ம் தேதியுடனும்; மஹாராஷ்டிரா சட்டசபைக்கான ஆயுட்காலம், நவம்பர், 9ம் தேதியுடனும் முடிவடைகின்றன.

விளம்பரம்

அங்கீகரிக்கப்பட்ட வாக்காளர் பட்டியலின் அடிப்படையில், ஹரியானா மாநிலம் , 1.82 கோடி வாக்காளர்களும், மஹாராஷ்டிரா மாநிலம் , 8.94 கோடி வாக்காளர்களும் கொண்டுள்ளது . இந்த தேர்தல் பிரசாரத்தின் போது , அரசியல் கட்சிகள் அனைத்தும், பிளாஸ்டிக் பொருட்களை தவிர்க்க வேண்டும்; சுற்றுச்சூழல் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் அமைந்த பொருட்களை மட்டுமே, பிரசாரத்திற்கு பயன்படுத்த வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தொடர்புடையவை  என்னால் முடிந்திருந்தால் மோடியை பிரதமராக விட்டிருக்க மாட்டேன் - இலங்கை தமிழர் குறித்து பேசிய அண்ணாமலைக்கு சீமான் பதிலடி.

மஹாராஷ்டிராவில் உள்ள, 288 தொகுதிகளுக்கும், ஹரியானாவில் உள்ள, 90 தொகுதிகளுக்கும், ஒரே கட்டமாக தேர்தல்கள் நடைபெறவுள்ளன.

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment