இந்திய பொருளாதார வளர்ச்சி 6-6.5 சதவிகிதம் இருக்கும்!

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6 முதல் 6.5 சதவீதம் வரை இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

நாளை கூட இருக்கும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்ய இருக்கிறார்.

விளம்பரம்
இந்திய பொருளாதார வளர்ச்சி 6-6.5 சதவிகிதம் இருக்கும்! 1

இதனையொட்டி மத்திய அரசின் தலைமை பொருளாதார ஆலோசகர் கிருஷ்ணமூர்த்தி சுப்பிரமணியன் தலைமையில் இந்திய பொருளாதார ஆய்வு அறிக்கையை தயார் செய்து நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்தனர்.

இதில் 2020-21 ஆம் நிதியாண்டில் இந்தியாவின் வளர்ச்சி 6 முதல் 6.5 சதவீதமாக இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. சர்வதேச அளவில் ஏற்றுமதிக்கு நெருக்கடியான சூழல் காணப்படுவதால் இந்தியாவின் ஏற்றுமதியில் பாதிப்பு அடையும் என ஆய்வறிக்கையில் கணிக்கப்பட்டுள்ளது.

விளம்பரம்

இதுமட்டுமின்றி வீடுகளுக்கான கட்டண வீதத்தை எஸ்டேட் நிறுவனங்கள் குறைப்பதன் மூலம் விற்க முடியாமல் இருக்கும் வீடுகளை விற்பனை செய்ய முடியும் எனவும் ஆய்வு அறிக்கை பரிந்துரை செய்துள்ளது.

கடந்த ஆண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7 சதவிகிதம் இருக்கும் என அரவிந்த் சுப்ரமணியன் தலைமையிலான குழு கணித்தது. ஆனால் 5 சதவீதத்துக்கும் குறைவாகவே பொருளாதார வளர்ச்சியில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment