தனிநபர் வரி குறைக்கப்படுவதாக என மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.

2020-21ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. மத்திய பட்ஜெட்டை தொடங்கி பேசிய நிதி அமைச்சர் பல்வேறும் கூறுகளை விவரித்தார்.
அதில் ஒன்றாக தனிநபர் ஈட்டும் வருவாய்க்கு நேரடியாக செலுத்தும் வரிகள் குறைப்படுவதாக அறிவித்துள்ளார்.
அதன்படி,
0 – 2.5 லட்சம் வரை வருமானம் – வரி இல்லை
2.5 லட்சத்திலிருந்து 5 லட்சம் வரை – வரி இல்லை
5 லட்சத்திலிருந்து 7.5 லட்சம் வரை – 10% (குறைக்கப்பட்டுள்ளது)
7.5 லட்சத்திலிருந்து 10 லட்சம் வரை – 15% (குறைக்கப்பட்டுள்ளது)
10 லட்சத்திலிருந்து 12.5 லட்சம் வரை – 20% (குறைக்கப்பட்டுள்ளது)
12.5 லட்சத்திலிருந்து 15 லட்சம் வரை வருமானம் – 25% (குறைக்கப்பட்டுள்ளது)
15 லட்சத்துக்கு மேல் – 30% (குறைக்கப்படவில்லை)
இதேபோல, குறைந்த விலக்குை வீடு வாங்குவோருக்கு கடந்தாண்டு கூடுதலாக 1,50,000 ரூபாய் வருமான வரி விலக்கு பெற அனுமதிக்கப்பட்டிருந்தது. தற்போது, அதே திட்டம் மேலும் ஒராண்டுக்கு நீடிக்கப்பட்டுள்ளது
புதிதாக மாற்றம் செய்யப்பட்டுள்ள வருமான வரி விதிப்பினால் சுமார் ரூ.40,000 கோடி அளவில் மத்திய அரசுக்கு இழப்பீடு ஏற்படும்.