கார்த்தி பல கெட்டப்புகளில் மிரட்டி எடுத்துள்ள “சர்தார்” படத்தின் டீஸர்.! சும்மா தரமா இருக்கு.!

தமிழ் திரையுலகின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் கார்த்தி. இவர் பருத்திவீரன் என்னும் படத்தின் மூலமாக தமிழில் அறிமுகமானார். முதல் படமே அவருக்கு மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது. இதனால் அவர் பல படங்களில் நடித்த தொடங்கினார். அவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த படம் விருமன். இந்த படத்தில் கிராமத்து நாயகனாக லுங்கியில் அவர் நடித்தது மிகப்பெரிய வரவேற்பு பெற்றது. தற்போது அவர் பொன்னியின் செல்வன் என்னும் வரலாற்று காவியத்தில் வந்தியதேவன் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். வந்திய தேவன் தான் இந்த கதையின் ஹீரோ. எனவே மிகப் பெரிய படத்தில் ஹீரோவாகவும் நடித்து முடித்துள்ளார் கார்த்தி. அவர் நடிப்பில் அடுத்த வெளியாக இருக்கும் படம் தான் சர்தார். இந்த படத்தின் டீசர் தற்போது வெளியாகியிருக்கிறது.

கார்த்தி பல கெட்டப்புகளில் மிரட்டி எடுத்துள்ள "சர்தார்" படத்தின் டீஸர்.! சும்மா தரமா இருக்கு.! 1

விளம்பரம்

சர்தார் திரைப்படத்தை பிஎஸ் மித்ரன் இயக்கியிருக்கிறார். பிரின்ஸ் பிக்சர்ஸ் எஸ்.லக்ஷ்மன் குமார் இந்த படத்தை தயாரித்திருக்கிறார். இதில் இரட்டை வேடங்களில் கார்த்தி நடித்துள்ளதாக தெரிகிறது. மேலும் இந்த படத்தில் ராஷிகண்ணா, லைலா, இளவரசு, முனீஸ் காந்த் போன்ற பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்தை திரையரங்குகளில் வெளியிடும் உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் கைப்பற்றியுள்ளது. தற்போது இந்த படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. இராணுவ ரகசியங்களை உளவாளி ஒருவர் ரகசியமாக சேகரிப்பது போல டீசர் வெளியாகியிருக்கிறது. மேலும் அதிரடி சண்டை ஆக்‌ஷன் காட்சிகளும் நிறைந்துள்ளது. எனவே இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரிக்கித்துள்ளது.

தொடர்புடையவை  "ஆம்பளைக்கும், பொம்பளைக்கும் என்ன வித்தியாசம்?" 'கயல்' ஆனந்தி நடிக்கும் 'மங்கை' படத்தின் ட்ரைலர் இதோ.!

கார்த்தி பல கெட்டப்புகளில் மிரட்டி எடுத்துள்ள "சர்தார்" படத்தின் டீஸர்.! சும்மா தரமா இருக்கு.! 3

விளம்பரம்

இந்த படத்தின் டீசரை கார்த்தியின் அண்ணனும், நடிகருமான சூர்யா வெளியிட்டு இருக்கிறார். மேலும் அவர் பொன்னியின் செல்வன் படத்தையும் பிளாக்பஸ்டர் ஹிட் ஆக வாழ்த்தியிருக்கிறார். சர்தார் படத்தின் டீசரை நீங்களும் காண..கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்.. Watch the below video..

விளம்பரம்

YouTube Video Code Embed Credits: Sony Music South

விளம்பரம்

Leave a Comment