மனைவியுடன் தல தீபாவளி கொண்டாடிய நடிகர் ரெடின் கிங்ஸ்லி..!

தமிழ் சினிமாவில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து சினிமாவுக்குள் அறிமுகமாகியவர் ரெடின். தற்போது இவருக்கு மிகப்பெரிய அளவு ரசிகர்கள் கூட்டமே உள்ளது. தனது பேச்சு மற்றும் முகபாவனைகளால் அனைவரையும் ரசிக்க வைத்தவர் இவர். பல முன்னணி நடிகர்கள் படத்திலும் காமெடியனாக நடித்து கலக்கி வருகிறார். இயக்குனர் நெல்சனால் அறிமுகம் செய்யப்பட்ட இவர், டாக்டர் மற்றும் ஜெயிலர் படங்களில் நடித்து காமெடியில் கலக்கி இருந்தார்.

மனைவியுடன் தல தீபாவளி கொண்டாடிய நடிகர் ரெடின் கிங்ஸ்லி..! 1

விளம்பரம்

தற்போது தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். இவர் சீரியல் நடிகை சங்கீதாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்கள் திருமணம் அண்மையில் எளியமுறையில் நடைபெற்று இருந்தது. இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. தற்போது மனைவி சங்கீதாவுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார் ரெடின்.

மனைவியுடன் தல தீபாவளி கொண்டாடிய நடிகர் ரெடின் கிங்ஸ்லி..! 3

விளம்பரம்

இந்நிலையில் சங்கீதா அடிக்கடி கணவர் ரெடின் உடன் புகைப்படங்கள் எடுத்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார். இந்த புகைப்படங்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று இருக்கிறது. தற்போது இவர் மனைவி சங்கீதா உடன் தீபாவளியை கொண்டாடி புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார். ரசிகர்கள் அவருக்கு தங்களது தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

விளம்பரம்

Leave a Comment