கன்னட சினிமாவில் வெளியான கில்லி படத்தில் நடித்து சினிமாவுக்கு அறிமுகம் ஆகியவர் ரகுல் ப்ரீத்தி சிங். இவருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டமே கன்னடம் மற்றும் தெலுங்கு சினிமாவில் உள்ளது. தமிழ் சினிமாவில் 2012ஆம் ஆண்டு தடையற தாக்க படத்தில் நடித்து தமிழ் சினிமாவுக்குள் என்ட்ரி கொடுத்து உள்ளார். இப்படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் இவர் நடித்ததால் இவர் பெரிதாக வரவேற்பினை பெறவில்லை. தனக்கான வாய்ப்புக்காக காத்து இருந்தார் நடிகை ப்ரீத்தி சிங்.

அப்படி இவருக்கு ஹிட் அடித்த படம் தான் தீரன் அதிகாரம் ஒன்று. இப்படத்திற்கு பிறகு பலருக்கும் இவர் பரிச்சயமானவர் ஆகி உள்ளார்.பின்னர் தொடர்ந்து தமிழ், ஹிந்தி மற்றும் தெலுங்கு என வரிசையாக படங்கள் நடிக்க தொடங்கி அசத்தி வருகிறார். அண்மையில் இவர் தனது காதலரை கரம் பிடித்து இல்லற வாழ்க்கையில் அடியெடுத்து வைத்து உள்ளார்.

கடந்த அக்டொபர் மாதம் 5ஆம் தேதி பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி வெயிட் தூக்கியதால் அவரது முதுகில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனை பொருட்படுத்தாமல் மீண்டும் படப்பிடிப்பிற்கு சென்றுள்ளார். இந்நிலையில் நாளாக நாளாக அவரது உடல்நிலை மோசமடைந்து உள்ளது. தற்போது கடந்த 10நாட்களாக படுக்கையில் இருந்து ரெஸ்ட் எடுத்து வருகிறார் ப்ரீத்தி சிங்.