செல்ஃபி எடுத்து பரிதாப நிலையில் தன் கருத்தை பதிவிட்டுள்ள நடிகை!

செல்ஃபி எடுத்து பரிதாப நிலையில் தன் கருத்தை பதிவிட்டுள்ள நடிகை! 1

சிலர் செல்ஃபி எடுப்பதாக கூறி ஆர்வக்கோளாரான பல விஷயங்கள் செய்து கொண்டிருக்கிறார்கள். உதாரணமாக யானை அருகே, பாலம் மீது நின்று, ஓடும் ரயில் அருகே நின்று என செல்பி எடுத்து ஆபத்தில் மாட்டிக் கொள்கிறார்கள். இவர்களில் ஒருசிலர் உயிரையும் இழந்திருக்கின்றனர். இதே நிலைமை நடிகை ரைசாவுக்கும் நடந்திருக்கிறது. இணைய தள பக்கத்தில் ரைசா ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் படுக்கையில் படுத்தபடி செல்பி எடுக்க முயன்றேன்.

அப்போது செல்போன் கைநழுவி என் உதட்டின் மீது விழுந்ததில் ரத்தம் கட்டிக்கொண்டு ஒரே வலி.. தாங்க முடியவில்லை. ஆனால் காயம் லேசாகத்தான் இருக்கிறது’ என தெரிவித்திருக்கிறார்.

விளம்பரம்

ரைசாவை யார் என்று தெரிகிறதா? சமீபத்தில் ஹரிஷ் கல்யானுடன் டேட்டிங் செய்ய விருப்பம் தெரிவித்தவர். அவருடன் சேர்ந்து, ‘பியார் பிரேமா காதல்’ படத்திலும் நடித்திருக்கிறார். ‘தனுசு ராசி நேயர்களே’ படத்தில் ஹரிஷ்க்கு ஜோடியாகவும் கெஸ்ட் ரோலிலும் நடித்திருந்தார்.

விளம்பரம்

Leave a Comment