சந்தானம் நடித்துள்ள ஏஜென்ட் கண்ணாயிரம் படம் எப்படி இருக்கு? முழு திரைவிமர்சனம் இதோ.!

நடிகர் சந்தானம் நடிப்பில் மனோஜ் பீதா இயக்கத்தில் இன்று திரையரங்குகளில் வெளியாகியிருக்கும் படம் தான் ஏஜென்ட் கண்ணாயிரம். இந்த படம் ஏஜென்ட் சாய் ஸ்ரீனிவாச ஆத்ரேயா என்ற தெலுங்கு படத்தை தமிழில் ரீமேக் செய்யப்பட்டு எடுக்கப்பட்டுள்ளது. தெலுங்கில் வெளிவந்த இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதால், தமிழில் எதிர்பார்ப்பு எகிறி இருந்தது. இந்த படத்தில் சந்தானத்துடன் இணைந்து சுமன், முனீஸ்காந்த், குக் வித் கோமாளி பிரபலம் புகழ் ஆகியோர் நடித்திருந்தனர். இன்று இந்த படம் வெளியான நிலையில் மக்கள் பலரும் கலவையான விமர்சனங்களை கொடுத்து வருகின்றனர். இந்த படம் எப்படி இருக்கிறது என்பது குறித்த முழு திரை விமர்சனத்தை தற்போது பார்க்கலாம்.

சந்தானம் நடித்துள்ள ஏஜென்ட் கண்ணாயிரம் படம் எப்படி இருக்கு? முழு திரைவிமர்சனம் இதோ.! 1

விளம்பரம்

சந்தானத்தின் தந்தை குரு சோமசுந்தரம் ஒரு மிகப்பெரிய ஜமீன்தார். அவருக்கும் அவர் தாலி கட்டாமல் குடும்பம் நடத்தி வந்த ஒருவருக்கும் பிறந்தவர் தான் சந்தானம். சிறுவயதில் இருந்தே சந்தானமும் அவரது தாயும் தந்தையின் மூத்த மனைவியின் குடும்பத்தினரால் அசிங்கப்படுத்தப்பட்டு வருகின்றனர். பல அவமானங்களையும் சந்தித்து வருகின்றனர். ஜமீன்தாரின் முதல் மனைவியும் அவரது பிள்ளைகளும் சந்தானம் மற்றும் அவரது தாயையும் அசிங்கப்படுத்திக் கொண்டே இருக்கிறார்கள். சிறு வயதில் இருந்தே துப்பறியும் மூளை கொண்ட சந்தானம் வளர்ந்து பருவத்தை அடைந்த பிறகு ஒரு ஏஜெண்டாக வேலை பார்த்து வருகிறார். ஒருநாள் அவரது தாய் இந்துமதி இறந்துவிட அவரது இறுதிச் சடங்கு நிகழ்விற்காக ஊருக்கு வருகிறார் சந்தானம்.

தொடர்புடையவை  "என்னோட ஏரியால நீங்கலாம் ரவுடிங்களா?"!! இயக்குனர் லோகேஷ் கனகராஜை வடிவேலுடன் ஒப்பிட்டு சீண்டும் ப்ளூ சட்டை மாறன்!!

சந்தானம் நடித்துள்ள ஏஜென்ட் கண்ணாயிரம் படம் எப்படி இருக்கு? முழு திரைவிமர்சனம் இதோ.! 3
அவர் ஊருக்கு வருவதற்குள் அவரது தாயின் இறுதிச்சடங்குகள் அனைத்தும் முடிந்து விடுகிறது. இதனால் தனது தாயின் முகத்தை கடைசியாக கூட பார்க்க முடியாமல் தினம் தினம் ஏங்கி தவித்து வருகிறார். இந்த நிலையில் அவரிடம் ஒரு கொலை வழக்கு மாட்டிக்கொள்கிறது. அந்த கொலை வழக்கை கண்டுபிடிக்க சந்தானம் களத்தில் இறங்குகிறார். அதை எப்படியாவது திசை திருப்பி விட வேண்டும் என்று எதிரிகள் திட்டம் தீட்டுகின்றனர். ஒரு கட்டத்தில் எதிரிகளிடமே சென்று சிக்கி விடுகிறார் சந்தானம். பின்னர் அவர் எதிரகளிடம் இருந்து தப்பித்தாரா?அந்த கொலையை செய்தவரை கண்டுபிடித்தாரா? என்பதுதான் படத்தின் மீதி கதை.

விளம்பரம்

சந்தானம் நடித்துள்ள ஏஜென்ட் கண்ணாயிரம் படம் எப்படி இருக்கு? முழு திரைவிமர்சனம் இதோ.! 5

சந்தானம் படம் என்றாலே காமெடி கலாட்டாக்களுக்கு பஞ்சம் இருக்காது. ஆனால் இவர் ஹீரோவாக களம் இறங்கிய பின்பு பெரிய அளவில் எந்த படமும் கை கொடுக்கவில்லை. கடைசியாக வெளியான குளுகுளு படமும் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. தெலுங்கில் மிகப்பெரிய வெற்றி பெற்ற ஏஜென்ட் சாய் ஸ்ரீனிவாச ஆத்ரேயா படம் மிகப்பெரிய வெற்றி பெற்றிருந்தது. ஆனால் இதை தமிழில் ரீமேக் செய்திருந்த மனோஜ் பிதா இந்த படத்தை சொதப்பி விட்டார் என்றுதான் சொல்ல வேண்டும். வழக்கம்போல சந்தானத்தின் நடிப்பு மட்டுமே இந்த படத்திற்கு கை கொடுத்துள்ளது. இந்த படத்தில் சந்தானத்தின் தந்தை மற்றும் தாய் கதாபாத்திரத்தில் வருபவர்கள் நேர்த்தியாக நடித்திருக்கின்றனர். சந்தானத்திற்கு ஜோடியாக வரும் ரியாவும் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.

விளம்பரம்
தொடர்புடையவை  Beast | Jolly O Gymkhana - Official Lyric Video | Beast | Thalapathy Vijay | Sun Pictures | Nelson | Anirudh

சந்தானம் நடித்துள்ள ஏஜென்ட் கண்ணாயிரம் படம் எப்படி இருக்கு? முழு திரைவிமர்சனம் இதோ.! 7
காமெடியனாக வரும் புகழ் செய்யும் காமெடிகள் சிரிப்பை வரவழைக்கவில்லை. யுவனின் பாடல்கள் பல இடங்களில் கை கொடுக்கவில்லை. ஆனால் சில இடங்களில் பிண்ணனி இசை வெகுவாக மக்களை கவர்ந்துள்ளது. முனிஷ்காந்த், ரெட்டிங் கிங்ஸ்லி ஆகியோரின் காமெடிகள் ஓரளவுக்கு ஒர்க் அவுட் ஆகி உள்ளது. தேனி ஈஸ்வர், சரவணின் ஒளிப்பதிவு படத்திற்கு பக்கபலமாக இருக்கிறது. விறுவிறுப்பு இல்லாத கதைக்களமும், திரைக்கதையும் படத்தை பின்னோக்கி நகர்த்துகிறது. மொத்தத்தில் ஒரு ஏஜெண்டாக தோற்று விட்டார் சந்தானம் என்று தான் சொல்ல வேண்டும். ஏஜென்ட் கண்ணாயிரம் படத்திற்கு தமிழ்க்ளிட்ஸ் வழங்கும் ரேட்டிங் 2/5

விளம்பரம்

Leave a Comment