ஜெயம் ரவி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம்தான் அகிலன். இந்த படத்தை பூலோகம் படத்தை இயக்கிய கல்யாண் கிருஷ்ணன் இயக்கியுள்ளார். ஸ்க்ரீன் சீன் மீடியா என்ற நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது. இந்த படத்திற்கு சாம் என்பவர் இசையமைத்துள்ளார். மறைந்த இயக்குனர் எஸ்.பி. ஜனநாதன் திரைக்கதை எழுதியுள்ளார். இந்த படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கரும், தான்யா ரவிச்சந்திரன் இருவரும் நடித்துள்ளனர். சில நாட்களுக்கு முன்பு படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி மிகுந்த வரவேற்பை பெற்று இருந்தது. தற்போது இந்த படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. கீழே உள்ள டீசர் வீடியோவை பார்க்கவும்.

இந்த படத்தில் ஜெயம் ரவி இரட்டை வேடங்களில் நடிப்பதாக தகவல்கள் வெளியாகி இருந்தது. அதில் ஒரு கேரக்டர் கடற்டை அதிகாரியாக நடிப்பதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளது. படத்தின் படபிடிப்பு கடந்த ஆண்டு தொடங்கி விறுவிறுப்பாக நடந்த நிலையில் படத்தின் அனைத்து பணிகளும் முடிந்து படம் வெளியீட்டுக்கு தயாராக உள்ளது. விரைவில் திரையரங்குகளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது இந்த படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. ஜெயம் ரவியின் மாறுபட்ட்நடிப்பில் உருவாகியுள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது. உடலை ஏற்றி கட்டுமஸ்தாக கலக்கி இருக்கிறார் ஜெயம் ரவி. வட சென்னையை கலக்கி வரும் ரவுடி கும்பல்களை ஒழிப்பது பற்றிய கதை. அந்த படத்தின் டீசரை நீங்களும் காண..Watch Agilan Teaser Below..
Youtube Video Code Embed Credits: Think Music India