சின்னத்திரை ஜோடிகளில் மிகவும் பிரபலமானவர்கள்தான் சஞ்சீங் மற்றும் ஆல்யா. இவர்கள் இருவரும் விஜய் டிவியில் ஒளிபரப்பான “ராஜா ராணி” என்ற சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகம் ஆனார்கள். சஞ்சீவ் கார்த்திக் என்ற கேரக்டரிலும், ஆல்யா மான்சா செம்பா என்ற கேரக்டரிலும் நடித்தனர். வேலைக்கார பெண்ணாக வரும் செம்பாவை காதலித்து திருமணம் செய்து கொள்வார் கார்த்திக். திரையில் இருந்த இந்த ஜோடி நிஜத்திலும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இந்த ஜோடிக்கு ரசிகர் பட்டாளம் ஏராளம். இவர்கள் செய்யும் குறும்புகளை அவ்வபோது இன்ஸ்டாகிராமில் பதிவேற்றி வருகின்றனர். Youtube video code embed credits: Behindwoods TV

இவர்களுக்கு முதலாவதாக பெண் குழந்தை ஒன்று உள்ளது. அந்த குழந்தையின் பெயர் ஐலாசையத். பார்ப்பதற்கே பொம்மை போல இருக்கும் ஐலா செய்யும் குறும்பு வீடியோக்களை ரசிக்க மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது என சொல்லலாம். அந்த அளவிற்கு ஐலா மீதும், ஆல்யா மற்றும் சஞ்சீவ் மீதும் மக்கள் அன்பை பொழிந்து வருகின்றனர். தற்போது ஆல்யா மானசா இரண்டாவதாக ஆண் பிள்ளையை பெற்றுள்ளார். அந்த குழந்தைக்கு அர்ஷ் என்று பெயர் வைத்துள்ளனர். சஞ்சீவ் ஆல்யா ஐலா அர்ஷ் ஆகியோர் ஒருவர் மீது ஒருவர் காட்டும் அன்பு பார்பதற்க்கே மிக அழகாக இருக்கும்.

பொம்மை போல் இருக்கும் ஐலாவின் சிறு சிறு சேட்டைகள் பார்ப்பதற்கே மிக அழகாக இருக்கும். சஞ்சீவ் ஐலாவின் வீடியோக்களை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றி வருவது வழக்கம். அந்த வீடியோக்கள் மில்லியன் பார்வையாளர்களை கடப்பது வாடிக்கையாகி வருகிறது. அந்த வகையில் தற்போது ஐலாவின் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அதில் ஐலாவிற்கு ஹேர்ஸ்டைல் மாற்றுவதற்காக முடி வெட்ட சலூனுக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு ஐலா அழாமல் இருப்பதற்காக மொபைலில் வீடியோக்களை காட்டி வருகிறார் ஆல்யா. சமத்தாக உட்கார்ந்து முடி
வெட்டிக் கொள்ளும் ஐலாவின் வீடியோவை நீங்களும் காண.. Watch The Below Video..