Categories: சினிமா

“தல தல தான்”!! துப்பாக்கி சுடும் போட்டியில் 4 தங்கம் வென்று அசத்தல்”!!

வெளியிட்டது

சினிமாவில் ஒருவர் எந்த வித பின்புலமும் இன்றி முயன்று தனி ஒரு ஆளாக சாதித்து காட்டுவது என்பது மிகவும் பெரிய காரியம். அந்த வகையில் முன்னர் இருந்த ஜெனெரேஷன் நடிகர்களில் அதனை ரஜினி செய்து காட்டியிருக்கிறார் என்றால் இன்றைய தலைமுறைக்கு அதனை நடத்தி காட்டி, இளைய தலைமுறைக்கு எடுத்துக்காட்டாக முன் நிற்பவர் நடிகர் அஜித்.

"தல தல தான்"!! துப்பாக்கி சுடும் போட்டியில் 4 தங்கம் வென்று அசத்தல்"!! 1

“தல” என அழைக்கப்படும் நடிகர் அஜித், அறிமுகமான முதல் நிறைய போராட்டங்களும், தோல்விகளும் சந்தித்து தான் இன்று இந்த நிலையில் இருக்கிறார். தனி ஒரு ஆளாக அவர் முயன்று இந்த இடத்தில இருக்கும் நடிகர் அஜித், நிறைய உட்சங்களையும், கௌரவங்களையும் அடைந்திரா முடியாத மிக பெரிய ரசிகர் கூட்டத்தையும் தன் வசம் படுத்தியுள்ளார்.

அண்மையில் வெளியான நடிகர் அஜித்தின் “வலிமை” படம் கலவையான விமர்சனங்களை பெற்ற போதிலும் 200 கோடிக்கு மேல் வசூல் செய்து அசத்தியுள்ளது. இப்பொது நடிகர் அஜித், மலையாள நடிகை மஞ்சு வாரியர் ஆகியோர் நடிப்பில் 3வது முறையாக போனி கபூர் தயாரிக்க, ஹெச்.வினோத் இயக்கும் படம் “ஏ.கே.61” மும்முரமாக ஆந்திர மாநிலத்தில் படமாக்க பட்டு வருகிறது. இந்த படம் முடிவடைந்தவுடன் இயக்குனர் விக்னேஷ் சிவன் – அஜித் இணையும் படம் உருவாகவுள்ளது.

இந்நிலையில் சினிமாவை தாண்டி நடிகர் அஜித் தனக்கு பிடித்தமான வேலைகளில் எப்போதும் தன்னை ஈடுபடுத்திவருவது அனைவர்க்கும் தெரிந்த விஷயமே. குறிப்பாக கார் ரேஸ் வீரராக இருந்த அவர், தற்போதைய உடல் சூழல் அதற்கு ஒத்து வராத காரணத்தால் அதில் இருந்து விலகியுள்ளார். ஆனால் தன்னுடைய மற்றொரு ஆர்வத்தை மக்களிடம் காண்பித்து வருகிறார்.

துப்பாக்கி சுடுதல் போட்டிகளில் மிகவும் ஈடுபாட்டுடன் கலந்து கொண்டு வரும் அவர், அதில் தன்னுடைய மும்முரத்தையும் காட்டி வருகிறார்.      இந்நிலையில் நடைபெற்று முடிந்த அந்த துப்பாக்கிசூடுதல் போட்டியில் அஜித்குமார் 4 தங்கம் மற்றும் 2 வெண்கல பதக்கங்கள், அதாவது சென்டர் பயர் பிஸ்டல் ஆண்கள், ஸ்டாண்டர்ட் பிஸ்டல் மாஸ்டர், ஆண்கள் 50 மீட்டர் பிரீ பிஸ்டல் மாஸ்டர் போன்ற பிரிவுகளில் பதக்கங்களை வென்று அசத்தியுள்ளார். இந்த போட்டிகளின் போது நடிகர் அஜித் திருச்சி வந்திருந்த போது ரசிகர்கள் பலர் குவிந்ததால் அவர் மற்ற போட்டிகளில் கலந்து கொள்ளாமல் பதியிலேலேயே அங்கிருந்து கிளம்பியுள்ளார்.

இந்த செய்திகள் இப்பொது வெளியாகி அவருடைய ரசிகர்களுக்கு மட்டுமின்றி அனைத்து திரை ரசிகர்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சினிமாவில் பயங்கர கேங்ஸ்டராக, கண்டிப்பான போலீஸ் அதிகாரியாக, ராணுவ ஏஜெண்டாக நடித்து வரும் அஜித் நிஜ வாழ்விலும் துப்பாக்கி கையாளுவத்தில் சிறப்பாக திகழ்ந்து வருவது மிகவும் பாராட்டுகளை குவித்து வருகிறது.

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்