சன் தொலைக்காட்சியில்ஒளிபரப்பாகி வரும் தொடர் ஒன்று விரைவில் முடிவுக்கு வர இருக்கும் தகவல் தற்போது கிடைத்திருக்கிறது. 90ஸ் காலத்தில் தொடங்கி, இன்று வரை சின்னத்திரையில் சீரியல்களுக்கு பெயர் போன ஒரு தொலைக்காட்சி என்றால் அது சன் டிவி தான். ஆரம்பத்தில் பல குடும்ப பாங்கான கதைகளை ஒளிபரப்பி இல்லத்தரசிகள் மத்தியில் நீங்காத இடம் பிடித்திருந்தது சன் தொலைக்காட்சி. தற்போதும் காலை 10 மணிக்கு தொடங்கி, இரவு 10 மணி வரை சீரியல்களை ஒளிபரப்பாகி வருகிறது.

ஒவ்வொரு கதையும் ஒவ்வொரு விதமான கதைக் களம் என்ற பொழுதும் அதிகம் பெண்களை மையப்படுத்திய சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகிறது. ‘சிங்கப் பெண்ணே’, ‘கயல்’, ‘சுந்தரி’, ‘வானத்தைப்போல’, ‘எதிர்நீச்சல்’ போன்ற கதைகள் பெண்களை மையப்படுத்தி ஓடிக்கொண்டிருக்கிறது. சன் டிவியில் சில புதிய தொடர்கள் வரவால் நன்றாக ஓடிக் கொண்டிருந்த பழைய தொடர்கள் பலவற்றையும் முடிவுக்கு கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது. ஏற்கனவே ‘அன்பே வா’, ‘பிரியமான தோழி’ போன்ற தொடர்களில் முடிவுக்கு வந்த நிலையில், தற்போது ‘அருவி’ சீரியலும் முடிவுக்கு வர இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

இந்த சீரியலில் நடிகர் லிவிங்ஸ்டன் மகள் ஜோவிதா ஹீரோயினாக நடித்து வருகிறார். இவருடன் இணைந்து கார்த்திக் வாசு, ஈஸ்வர் ரகுநாதன், நடிகை அம்பிகா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். சமூகத்தில் இருக்கும் தடைகளை தாண்டி முன்னேற துடிக்கும் பெண்ணின் கதையை மையப்படுத்தி ‘அருவி’ சீரியல் ஒளிபரப்பாகி வந்த நிலையில், விரைவில் இந்த சீரியலையும் முடிக்க சன் டிவி திட்டமிட்டுள்ளது.
View this post on Instagram