விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலின் இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. அதில் முத்துவிற்காக மருந்து ஒன்றை வாங்கி அதை மீனா ஜூஸில் கலந்து வைத்திருந்த நிலையில், அந்த ஜூஸை விஜயா எடுத்துக் குடிக்கிறார். இதனால் அவருக்கு நிற்காமல் வயிற்றுப்போக்கு ஏற்படுகிறது. அந்த ப்ரோமோ தற்போது வெளியாக இருக்கிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் முத்து குடித்துவிட்டு கார் ஓட்டுவதாக, சித்தரித்து வீடியோ ஒன்று வெளியாகியிருக்கிறது. இதனால் முத்துவிற்கு அவப்பெயர் ஏற்படுகிறது. அவருடைய காரையும் போலீசார் பறிமுதல் செய்து விட்டனர். இதனால் முத்துவின் குடிப்பழக்கத்தை மாற்ற நினைக்கும் மீனா, அவருக்காக மருந்து ஒன்றை வாங்கி ஜூஸில் தெரியாமல் கலந்து கொடுக்க முயற்சி செய்து கொண்டிருக்கிறார். அதை விஜயா தெரியாமல் எடுத்துக் குடித்து விடுகிறார்.

இதனால் விஜயாவிற்கு தொடர் வயிற்றுப்போக்கு ஏற்படுகிறது. அந்த காமெடியான ப்ரோமோ தற்போது வெளியாகியிருக்கிறது. நீங்களும் அந்த வீடியோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!
YouTube Video Embed Code Credits: Vijay Television