சின்னத்திரையில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி ஷோக்கள் என்றாலே மக்கள் மத்தியில் அவ்வளவு பிரபலம். இது போன்ற நிகழ்ச்சிகளை மக்கள் விரும்பி பார்க்க ஆரம்பித்த நாள் முதல், நடன நிகழ்ச்சிகள், பாட்டு போட்டி என்று பல நிகழ்ச்சிகளை சின்னத்திரைகள் ஒளிபரப்பாகி வருகிறது. இதில் குறிப்பிட்டு சொல்லக்கூடிய ஒரு நிகழ்ச்சி என்றால் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல டான்ஸ் நிகழ்ச்சியை செல்லலாம். டான்ஸ் ஜோடி டான்ஸ் என்ற இந்த நிகழ்ச்சி ஜீ தொலைக்காட்சியில் சனி மற்றும் ஞாயிறு இரவு எட்டு மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது. இது முதல் இரண்டு சீசன்களை முடித்து, தற்போது மூன்றாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. முதல் இரண்டு சீசன்களுக்கும் நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில் மூன்றாவது சீசனை ஒளிபரப்ப திட்டமிட்டு தற்போது இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்.

இந்த நிகழ்ச்சியை மிர்ச்சி சிவா தொகுத்து வழங்கி வருகிறார். இந்த நிகழ்ச்சிக்கு நடுவர்களாக பாபா பாஸ்கர், நடிகை சினேகா மற்றும் நடிகை சங்கீதா ஆகியோ மூவர் நடுவர்களாக பங்கேற்று வருகின்றனர். கடந்த வாரம் பக்தி பாடல்கள் சுற்று நடந்து முடிந்தது. இந்த வாரம் ஃப்ரீ ஸ்டைல் நடனம் நடைபெற்று வருகிறது. போட்டியாளர்கள் சிறப்பாக நடனமாடி தங்கள் திறமையை வெளிப்படுத்தி வருகின்றனர். இந்த நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் ஒருவர் சிறப்பு விருந்தினராக பங்கேற்று வருகிறார். இந்த நிலையில் இந்த வாரம் சிறப்பு விருந்தினராக நடிகர் ஆர்யா பங்கேற்று இருக்கிறார். அப்போது ஆர்யா சினேகாவுடன் ப்ரொபோஸ் செய்த வீடியோ வைரலாகி வருகிறது.
ஆர்யா ஒரு ரோசை சினேகாவிடம் கொடுத்து உண்மையாக சொல்கிறேன் உங்களை எப்படி கரெக்ட் பண்ணுவது என்று சத்தியமாக தெரியவில்லை என்று கூறுகிறார். அதற்கு சினேகா, பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தில் வரும் நயன்தாரா பேசும் வசனமான பார்டன் என்று கூறுகிறார். இந்த ப்ரோமோ இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது. நீங்களும் அந்த வீடியோவை காண.. Watch the below video..
YouTube Video Code Embed Credits: Zee Tamil