பாண்டியன் ஸ்டோர்ஸ் நாடகத்தில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வரும் காவியா அந்த தொடரில் இருந்து விலக இருப்பதாக சில நாட்களாகவே தகவல்கள் வெளியாகி வந்த நிலையில், அவரின் instagram பதிவு ஒன்று அதனை உறுதிப்படுத்தும் விதமாக உள்ளது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குடும்ப பங்கான தொடர்களில் முதன்மையானது பாண்டியன் ஸ்டோர்ஸ். கூட்டு குடும்பத்தின் அருமையை இன்றைய தலைமுறைகளுக்கு விளக்கும் ஒரு தொடராக இருக்கிறது. இந்தத் தொடரில் ஆரம்பத்தில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் சின்னத்திரை நடிகை சித்ரா ஆவார். இவருக்கும் இவருடைய காதலர் ஹேமந்த்-க்கும் நடந்த பிரச்சனையில் சித்ரா தற்கொலை செய்து கொண்டதாக தகவல்கள் வெளியானது. சித்ராவின் இடத்தை யாராலும் நிரப்ப முடியாமல் இருந்து வந்தது. இதனிடையே காவியா முல்லையாக நடிக்க ஒப்பந்தம் ஆகினார்.

ஆரம்பத்தில் இவரை முல்லையாக ஏற்றுக் கொள்ள முடியாமல் பாண்டியன் ஸ்டோர்ஸ் ரசிகர்கள் பலரும் தவித்து வந்தனர். பின்னர் ஒரு கட்டத்தில் காவியா தன்னுடைய அருமையான நடிப்பை வெளிப்படுத்தியதன் மூலமாக, மக்கள் மனங்களில் இடம் பெற்று இருந்தார். சித்ராவின் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது என்றாலும், காவியா தன்னுடைய பங்களிப்பை சிறப்பாகவே செய்து வந்தார் இந்த நிலையில் காவியாவும் நாடகத்தை விட்டு விலகுகிறார் என்ற செய்தி சிறிது காலமாகவே பரப்பப்பட்டு வருகிறது. தற்போது அதை உறுதிப்படுத்தும் விதமாக பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தில் இருக்கும் மூர்த்தி, தனம், ஆகியோரின் புகைப்படங்களோடு மிஸ் யூ ஆல் என்று இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு இருக்கிறார். இதனால் அவர் பாண்டியன் ஸ்டோர்ஸில் இருந்து விலக இருப்பது உறுதியாகி இருக்கிறது.

சில காலமாகவே சின்னத்திரை நடிகர்கள் தொடர்ந்து நாடகங்களில் இருந்து விலகி வருவது வாடிக்கையாகி வருகிறது. சிலர் போட்டி சேனல்களுக்கு அதிக சம்பளத்திற்காக வேலை பார்க்கின்றனர். வேறு சிலரோ வெள்ளித்திரை வாய்ப்பு கிடைக்கும் போது சீரியலை விட்டு விலகுகின்றனர். சமீபத்தில் பாரதிகண்ணம்மாவின் நடித்துக் கொண்டிருந்த ரோஷினி குக் வித் கோமாளிக்காக விலகினார். பிறகு ராஜா ராணி 2 சீரியல் இல் இருந்து ஆல்யா மானசா கர்ப்பமாக இருந்ததால் விலகினார். தற்போது அந்த சீரியலில் வில்லியாக நடித்து வரும் அர்ச்சனா தன்னுடைய வாழ்க்கையின் அடுத்த அத்தியாயத்திற்கு செல்ல இருப்பதாக சொல்லி விலகி விட்டார். அதே சீரியலில் ஹீரோவாக நடித்து வரும் சித்துவும் வெள்ளித்திரை வாய்ப்பு கிடைத்ததால் அவரும் இந்த சீரியலை விட்டு விலகக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதேபோல் பாண்டியன் ஸ்டோர்ஸ் நாடகத்தில் முல்லையாக நடித்து வரும் காவியாக்கும் வெள்ளித்திரையில் படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இதனால் அவரும் சீரியலில் இருந்து விலக வாய்ப்புள்ளதாக தெரிகிறது. கால்ஷீட் சரியாக கிடைக்காததால் சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை இரண்டிலும் சரியாக கவனம் செலுத்த முடியாது என்பதால் அவர் இந்த முடிவை எடுத்திருக்க கூடும் என்று அவரது ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். காவ்யாவின் இந்த முடிவு பாண்டியன் ஸ்டோர்ஸ் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியாகத்தான் இருக்க போகிறது.
