Categories: சினிமா

கோலாகலமாய் நடந்து முடிந்த நடிகர் அசோக் செல்வன் திருமணம்.! வெளியான புகைப்படங்கள் மற்றும் வீடியோ

வெளியிட்டது

பிரபல திரைப்பட நடிகர் அசோக் செல்வன் கீர்த்தி பாண்டியனை திருமணம் முடித்து இருக்கிறார். அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

கோலாகலமாய் நடந்து முடிந்த நடிகர் அசோக் செல்வன் திருமணம்.! வெளியான புகைப்படங்கள் மற்றும் வீடியோ 1

தமிழ் திரையுலகின் வளர்ந்து வரும் நடிகர்களாக இருப்பவர்கள்தான் அசோக் செல்வன் மற்றும் கீர்த்தி பாண்டியன். அருண் பாண்டியன் மகளாக இருக்கும் கீர்த்தி பாண்டியன் தும்பா, அன்பிற்கினியாள் போன்ற திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.


சில நாட்களுக்கு முன்பு அசோக் செல்வனும் கீர்த்தி காதலித்து வருவதாக கூறப்பட்ட நிலையில், தற்போது அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டிருக்கின்றனர். அருண்பாண்டியனின் சொந்த ஊரில் பண்ணை தோட்டத்தில் வைத்து இந்த திருமணம் நடைபெற்று இருக்கிறது.


அசோக் செல்வனும், கீர்த்தி பாண்டியனும் இணைந்து ‘ப்ளூ ஸ்டார்’ என்கிற படத்தில் நடித்துக் கொண்டிருந்தனர். அந்த திரைப்படம் இன்னமும் வெளியாகவில்லை. ஆனால் இந்த படத்தில் நடித்துக் கொண்டிருந்தபோது இவர்கள் இருவருக்கும் காதல் மலர்ந்துள்ளது.

இந்தப் படத்தை பா ரஞ்சித் தன்னுடைய நீலம் ப்ரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரித்திருக்கிறார். பா ரஞ்சித்திடம் உதவி இயக்குனராக இருந்த தினகரன் சிவலிங்கம் இந்த படத்தை இயக்கியிருக்கிறார்.

கிரிக்கெட்டை மையமாக வைத்து உருவாகி இருக்கும் இந்த படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இந்த படத்தில் சாந்தனு, பிரித்வி, திவ்யா துரைசாமி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர்.


இந்த படத்தில் நடித்துக் கொண்டிருந்தபோது அசோக் செல்வனுக்கும் கீர்த்தி பாண்டியனுக்குப் காதல் மலர்ந்துள்ளது. இருவரும் தங்களது விருப்பத்தை வீட்டில் சொல்ல இருவீட்டார் சம்மதத்துடன் இன்று திருநெல்வேலியை அடுத்த இட்டேரியில் இவர்களது திருமணம் நடந்து முடிந்துள்ளது.

பலரும் இந்த தம்பதிகளுக்கு தங்களது திருமண வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்