மக்கள் எதிர்பார்த்த பாக்கிய லெட்சுமி தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. விபத்தில் சிக்கி மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய கோபியைப் பற்றி வீட்டில் உள்ள அனைவரிடமும் உண்மையை போட்டு உடைத்து விடுகிறார் பாக்கியா. விபத்துக்குள்ளாகி மருத்துவமனையில் அட்மிட் ஆகியுள்ள கோபிக்கு ராதிகாதான் மனைவி என்று கையெழுத்திட்டு இருந்தார். இதை நேரில் பார்த்துவிட்ட பாக்கியா மனம் உடைந்து வீட்டிற்கு வந்தார். இரவு முழுவதும் மாடியிலேயே நின்றிருந்தார் பாக்கியா. தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோவில் கோபியின் உறவைப் பற்றி கோபி ராதிகாவின் உறவைப் பற்றி போட்டு உடைத்திவிட்டார் பாக்கியா. கோபியை நடுவீட்டில் நிறுத்தி வைத்து இவ்வாறு கூறியுள்ளார். இதனால் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது பாக்கிய லெட்சுமி. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

குடும்ப பாங்கான தொடர்களையும், வில்லன் வில்லி கதாபாத்திரங்களும், நெகடிவ் கதாபாத்திரங்களும் குறைவாக இருப்பதால் விஜய் டிவி தொடர்களை மக்கள் விரும்பி பார்க்க தொடங்கினர். அந்த வகையில் பாக்கிய லெட்சுமி, பாண்டியன் ஸ்டார்ஸ், பாரதி கண்ணம்மா, மௌனராகம் போன்ற தொடர்கள் டாப் ஹிட்டில் உள்ளன. இதில் பாக்கிய லெட்சுமி சற்று வித்தியாசமானது. அதில் வழக்கமான இரண்டு மனைவி கதை என்றாலும் சற்று விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் தொடர். இதில் கதாநாயகன் கோபிக்கு மனைவி குழந்தைகள் இருந்த போதிலும், அவர் தனது கல்லூரி கால தோழியிடன் மீண்டும் தொடர்பில் இருப்பது போன்றும், மனைவியை விவாகரத்து செய்துவிட்டு தனது தோழியை திருமணம் செய்து கொள்ள இருப்பது போலவும் கதை நகர்ந்து கொண்டுள்ளது.

தற்போது காரில் சென்று கொண்டிருந்த கோபி வேகமாக சென்று மரத்தில் மோதி, விபத்தில் சிக்கிவிட்டார். இந்த செய்தியை மருத்துவமனையில் இருக்கும் இருவேறு செவிலியர்கள் பாக்கியா மற்றும் ராதிகா என இருவருக்குமே போன் செய்து கூப்பிட இருவருமே அதிர்ச்சியாகி பதறி அடித்துக்கொண்டு ஒரே நேரத்தில் மருத்துவமனை விரைகிறார்கள். விபத்துக்குள்ளாகி மருத்துவமனையில் அட்மிட் ஆகியுள்ள கோபிக்கு ராதிகாதான் மனைவி என்று கையெழுத்திட்டுள்ளார். மேலும் ராதிகாவுடன் பேசிக் கொண்டிருப்பதை பாக்கியா பார்த்துவிட்டார். இதனால் மனமுடைந்த பாக்கியா நேற்று வீட்டிற்கு வந்தது போல் காட்டிய நிலையில் வீட்டில் உள்ள அனைவரிடமும் கோபி ராதிகா பற்றிய உண்மையை கூறியுள்ளார். வேற வெவலில் இருக்கும் அந்த ப்ரோமோவை நீங்களும் காண..Watch the below video..
Youtube Video Code Embed Credits: Vijay Television