700 எபிசோடுகளை கடந்த பாக்கியலெட்சுமி சீரியல்.! கேக் வெட்டி கொண்டாடிய டீம்..!

பாக்கியலட்சுமி தொடரில் நடித்து வரும் நடிகர்கள் தற்போது கேக் வெட்டி கொண்டாடி இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. விஜய் டிவியில் இல்லத்தரசிகளின் மனம் கவர்ந்த தொடராக இருப்பது பாக்கியலட்சுமி. இது பெங்காலி மொழியில் எடுக்கப்பட்ட ஸ்ரீ மேகா என்கிற தொடரின் தமிழ் ரீமேக் ஆகும். இந்த கதையில் கதாநாயகன் கோபிக்கு இரண்டு மனைவிகள். முதல் மனைவி பாக்யா அவருக்கு மூன்று பிள்ளைகள் இருக்கிறார்கள். அதில் மூத்த மகனுக்கு திருமணம் ஆகி அவருக்கே குழந்தை பிறக்க இருக்கிறது.

700 எபிசோடுகளை கடந்த பாக்கியலெட்சுமி சீரியல்.! கேக் வெட்டி கொண்டாடிய டீம்..! 1

விளம்பரம்

இந்த நிலையில் கோபி இரண்டாவதாக தனது கல்லூரி கால காதலியாக ராதிகாவை காதலித்து திருமணம் செய்து கொள்கிறார். ராதிகாவிற்கும் ஏற்கனவே திருமணம் ஆகி கணவரால் கைவிடப்பட்டவர். அவருக்கு மயூ என்ற ஒரு பெண் குழந்தையும் இருக்கிறார். இந்த நிலையில் தற்போது மூத்த மனைவி பாக்யாவை விவாகரத்து செய்துவிட்டு இரண்டாவது மனைவி ராதிகாவுடன் குடும்பம் நடத்தி வருகிறார் கோபி.

700 எபிசோடுகளை கடந்த பாக்கியலெட்சுமி சீரியல்.! கேக் வெட்டி கொண்டாடிய டீம்..! 3
கணவனால் கைவிடப்பட்ட மூத்த மனைவியான பாக்கியலட்சுமி மனம் தளராமல் தற்போது அடுத்த அடுத்த கட்டங்களுக்கு வாழ்க்கையெ நகர்த்தி வருகிறார். அவர் எடுத்த கேண்டீன் கான்டிராக் தோல்வியில் முடிந்ததால் தற்போது உணவகம் ஒன்றை நடத்த திட்டமிட்டு அதை செயல்படுத்தி வருகிறார். வெளியுலகம் தெரியாத பாக்கியலட்சுமி காலனி செகரட்டரி தேர்தலிலும் நின்று ஜெயித்திருக்கிறார். இதனால் இது பல பெண்களுக்கும் உந்துதலாக இருக்கிறது. கணவனால் கைவிடப்பட்டவர்கள் ஒரு மூலையில் முடங்கி கிடக்கத் தேவையில்லை என்றும், அவர்களாலும் சாதித்துக் காட்ட முடியும் என்பதை பாக்கியலட்சுமி நாளுக்கு நாள் நிரூபித்து வருகிறார்.

விளம்பரம்
தொடர்புடையவை  கண் விழித்து உண்மைகளை போட்டு உடைத்த ஜனார்த்தனன்.! வெளிச்சத்துக்கு வந்த பிரசாந்தின் சூழ்ச்சிகள்

700 எபிசோடுகளை கடந்த பாக்கியலெட்சுமி சீரியல்.! கேக் வெட்டி கொண்டாடிய டீம்..! 5

இதனால் இந்த தொடருக்கு இல்லத்தரசிகளின் ஆதரவு நாளுக்கு நாள் பெருகி வருகிறது. மேலும் நம் வீட்டில் இருக்கும் அம்மாக்களைப் போலவே வெளி உலகம் தெரியாமல் எதார்த்தமான நடிப்பை பாக்கியா வெளிப்படுத்தி வருவதாலும் இந்த தொடரை பார்க்கும் நபர்கள் நாளுக்கு நாள் அதிகமாகி வருகின்றனர். இந்த நிலையில் இன்று பாக்கியலட்சுமி சீரியல் குழுவினர் கேக் வெட்டி கொண்டாடி இருக்கின்றனர். இதனால் இந்த சீரியல் முடியப்போகிறதோ என்று பலர் கேள்வி எழுப்பினர்.

விளம்பரம்

700 எபிசோடுகளை கடந்த பாக்கியலெட்சுமி சீரியல்.! கேக் வெட்டி கொண்டாடிய டீம்..! 7
ஆனால் சீரியல் 700 எபிசோடுகளை கடந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருப்பதால் தான் நாடக குழுவினர் கேக் வெட்டி அதை கொண்டாடி இருக்கின்றனர். அந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

700 எபிசோடுகளை கடந்த பாக்கியலெட்சுமி சீரியல்.! கேக் வெட்டி கொண்டாடிய டீம்..! 9

விளம்பரம்

மேலும் பாக்கியலட்சுமி சீரியல் குழுவினருக்கு ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும், கமெண்ட்டில் தெரிவித்து வருகின்றனர். !

விளம்பரம்

Leave a Comment