பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. அதில் பாக்யாவை சுடிதார் அணிந்து வர சொன்ன ராதிகாவிற்கு ஆப்பு அடிக்கும் விதமாக பாக்கியலட்சுமியும் அவரது கேண்டின் குழுவினரும் சுடிதார் அணிந்து வந்துள்ளனர். மேலும் ராதிகாவை மரணமாக கலாய்த்து அனுப்பி இருக்கிறார் பாக்யா. அந்த ப்ரோமோ தற்போது வெளியாகி இருக்கிறது. ராதிகாவின் கணவரின் மூத்த மனைவி தான் பாக்யா. பாக்யாவின் கணவர் என்று தெரியாமலேயே கோபியை காதலித்து வருகிறார் ராதிகா. பாக்யா தனக்கு தோழியாக இருந்த போதிலும், அவரது கணவர் தான் கோபி என்று தெரியாமலேயே அவரை காதலித்து வந்தார். கோபியும் மூத்த மனைவி பாக்யா என்பதை மறைத்து ராதிகாவை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். திருமணம் செய்து கொண்ட நாள் முதல் இவர்கள் இருவருக்கும் ஏதாவது ஒரு பிரச்சனை வெடித்துக் கொண்டே இருக்கிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ராதிகா கோபியை திருமணம் செய்து கொள்வதற்கு முன்பு பாக்யாவிடம் தனக்கு கோபி உங்கள் கணவர் என்று தெரியாது, நான் தெரியாமல் தவறு செய்து விட்டேன் என்று பலமுறை சொல்லிப் பார்த்தும் பாக்கியா மனம் மாறவில்லை. இதனால் கோபியை திருமணம் செய்து கொள்வது என்கிற அதிரடி முடிவை எடுத்திருந்தார் ராதிகா. திருமணம் முடிந்து பாக்யாவின் எதிர் வீட்டிலேயே குடி வந்துவிட்டனர் கோபியும் ராதிகாவும். தொடர்ந்து இவர்கள் இருவரும் ஏதாவது ஒரு குடைச்சலை பாக்யாவிற்கு கொடுத்துக் கொண்டே தான் இருக்கின்றனர். தற்போது ஐடி கம்பெனியின் கேண்டீன் காண்ட்ராக்ட்டை எடுக்க பல வகைகளில் முயற்சி செய்தார் பாக்யா. ஆனால் அதே கம்பெனியில் ஹெச்ஆர் ஆக வேலை பார்க்கும் ராதிகா, பாக்யாவிற்கு இந்த காண்ட்ராக்ட் கிடைக்கக்கூடாது என்று பல வகைகளில் முட்டுக்கட்டை போடுகிறார். ஆனால் அனைத்தையும் மீறி தற்போது பாக்யாவிற்கு அந்த காண்ட்ராக்ட் கிடைத்திருக்கிறது.

ஆனாலும் எப்படியாவது பாக்யாவின் காண்ட்ராக்டை கெடுத்து விட வேண்டும் என்ற நோக்கில் ஏதாவது ஒரு குடைச்சலை தினமும் கொடுத்துக் கொண்டிருக்கிறார் ராதிகா. அந்த வகையில் தற்போது கேண்டினில் வேலை பார்க்கும் அனைவரும் சுடிதார் அணிந்து யூனிஃபார்ம் போல வரவேண்டும் என்று ஆணையிடுகிறார். இதனால் சுடிதார் அணிய பாக்கியாவின் வீட்டில் ஒத்துக் கொள்ள மாட்டார்கள் என்பதால் அவர் இந்த வேலையை விட்டுவிடுவார் என்ற நோக்கத்தில் இவ்வாறு செய்கிறார் ராதிகா. ஆனால் அனைவருக்கும் ஒரே யூனிபார்ம் போல வாங்கி கொடுத்து வேலைக்கு வந்து விட்டார் பாக்யா. கம்பெனிக்கு வந்த அவர் ராதிகாவிடம் வேறு ஏதாவது புது டாஸ்க் இருந்தால் யோசித்து விட்டு வா என்று சொல்லி ராதிகாவை மரணமாக கலாய்த்து அனுப்பி விடுகிறார்.. இதனால் முகமே வாடிப்போய் ராதிகா அங்கிருந்து கிளம்புகிறார். அந்த ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. நீங்களும் அந்த ப்ரோமோவை காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்.! Watch the Below Video..!
Youtube Video Embed Code Credits: Vijay Television